மோடியை எதிர்க்க வரலாற்றில் முதல்முறையாகப் புதிய கூட்டணி..!

0
490

அடுத்தச் சில மாதங்களில் நடக்க உள்ள பொதுத்தேர்தலில் மோடியை எதிர்க்க காங்கிரஸ் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில கட்சிகள் முதல் தேசிய கட்சிகள் வரையில் அதிரடியான திட்டங்களையும், முடிவுகளையும் எடுத்து வருகிறது.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தைச் சட்டமன்ற தேர்தலில் ஆதிக்கம் நிறைந்த கட்சிகளாக இருந்தாலும் பிஜேபியிடம் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் தோல்வியை அடைந்து முதல்வராக யோகி ஆதித்யநாத் பதிவியேற்றார். அதன் பின் அந்த மாநிலத்தில் நடத்து வரும் கூத்தை நாம் தினந்தோறும் பார்த்து சிரித்து வருகிறோம். சொல்லப்போனால் தற்போது யோகியின் வலிமையும் தற்போது குறைந்துள்ளது.

இதன் வெளிப்பாடு அம்மாநிலத்தில் நடந்த பொதுத்தேர்தலில் தெரிந்தது. இடைத்தேர்தலில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி வைத்துத் தேர்தலில் நின்ற நிலையில் பெரிய அளவிலான வெற்றியை இக்கூட்டணி பெற்றது.

இத்தகைய சூழ்நிலையில் தான் பொதுத்தேர்தல் குறித்த முடிவுகள் அனைத்து மாநிலத்திலும் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொதுத்தேர்தலிலும் வெற்றி பெற்று மோடி ஆட்சியைக் கவிழ்க வேண்டும் எனத் திட்டமிட்டு மாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணியைத் தொடர திட்டமிடப்பட்டு வருகின்றது.

இதுகுறித்த அறிவிப்புகள் ஜனவரி 15ஆம் தேதி மாயாவதி பிறந்தநாள் அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகத் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here