எனக்கும் பாலியல் தொந்தரவு நடந்தது.. மனம் திறந்த ஐஸ்வர்யா ராய்..!

0
654

தற்போது சமுக வலைத்தளத்தில் MeToo என்ற தொடர் செய்திகள் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இது பெண்களுக்கு நிகழும் பாலியல் தாக்குதல், பாலியல் தொந்தரவு பற்றிய நிகழ்வுகளை #MeToo என்ற ஹேஷ்டேக் வாயிலாகப் பெண்கள் மட்டும் அல்லாமல் ஆண்களுக்கும் இதற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த MeToo நிகழ்வு பாலிவுட்டில் மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது. இதன் வாயிலாக ஏற்கனவே சோனம் கபூர், ஸ்வரா பாஸ்கர், அனுரங் கஷ்யப், கங்கனா ரனாட், தனுஸ்ரீ தத்தா ஆகியோர் குரல் கொடுத்த நிலையில் தற்போது அமிதாப் பச்சனின் மருமகளும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய்ச் சேர்ந்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய்க்கு சல்மான் கான் உடன் இருந்த மோசமான உறவு குறித்துப் பல ஆண்டுகளுக்கு முன்பே திறந்த அவர், செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு விழாவில், நான் எப்போதும் மனம் திறந்து பேசுவேன், இதற்கு முன்பும் பேசினேன், இப்போதும் பேசினேன், இனியும் பேசுவேன் எனக் கூறினார்.

மேலும் பாலியல் பிரச்சனை குறித்துப் பெண்கள் மனதிறக்க இது சரியான நேரமா அல்லது அது சரியான நேரமா என்பது எதுவும் இல்லை, அதைப் பற்றி விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமையும் இல்லை.

பெண் தன் குரலுக்கு எப்போது வலிமை இருக்கிறது, தான் எப்போது கூறினால் தனக்கு ஆதரவு கிடைக்கும் என நினைக்கிறாளோ அப்போது அவள் மனம் திறக்கலாம். அதற்கான நேரம் தற்போது உருவாகியுள்ளது என்பதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி எனக் கூறினார் ஐஸ்வர்யா ராய்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here