25லட்ச சம்பள பாக்கி வேண்டாம்.. சாய் பல்லவியின் பெரிய மனசு..!

0
836

நடிகை சாய் பல்லவி தமிழ் பெண்ணாக இருந்தாலும், அவருக்குப் பிற மொழிகளில் மாபெரும் வரவேற்பு கிடைக்கிறது. குறிப்பாகத் தொலுங்கு படங்களில் சாய் பல்லவி இருந்தாலே படத்தின் வசூல் அளவு உயரும் அளவிற்குத் தற்போது சூழ்நிலை நிலவுகிறது.

இந்நிலையில் சாய் பல்லவி, ஷ்ரவானந்த் ஆகியோர் நடித்த படி படி லேச்ச மனசு படம் கடந்த மாதம் வெளியாகிய நிலையில், இந்தப் படம் பெரிய அளவில் ஹீட் ஆகும் எனச் சுமார் 22 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்ட நிலையில் முதல் நாளிலேயே தோல்வியைச் சந்தித்தது.

மேலும் இந்தப் படம் 8 கோடி ரூபாய்க்கு மட்டுமே வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில், பலபேருக்கு படத்தின் தயாரித்த ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் சம்பள பாக்கி வைத்துள்ளது.

இந்நிலையில் படத்தின் ஹீரோயின் சாய் பல்லவிக்கும் சுமார் 25 லட்ச ரூபாய் பாக்கி வைத்துள்ள நிலையில் இப்படத்தைப் பட வெளியீட்டுக்குப் பிறகு தயாரிப்பாளர் தருவதாக வாக்குறுதியளித்திருந்தார்.

மேலும் படம் தோல்வி அடைந்த நிலையிலும் சாய் பல்லவியின் மீதிச் சம்பளத்தைத் தர தயாரிப்பாளர் முயன்றுள்ளார். ஆனால் தற்போதைய நிலைமையில் தன்னால் இந்தத் தொகையைப் பெற்றுகொள்ள முடியாது. வசூலில் நஷ்டம் ஏற்பட்டதில் தானும் பொறுப்பேற்பதாகச் சாய் பல்லவி தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார்.

அடுத்த முயற்சியாக இந்தப் பணத்தைச் சாய் பல்லவியின் பெற்றோரிடம் தர தயாரிப்பாளர் முயன்றுள்ளார். அவர்களும் அதை வாங்க மறுத்துள்ளார்கள்.

தற்போது சாய் பல்லவி 1 கோடி ரூபாய்க்கும் அதிதமான சம்பளத்தைப் பெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here