மீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4

0
575

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 14 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தேர்ச்சி பெற்றுள்ளது.

சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் நாக்அவுட் முறையில் வெளியேறும். இதன் முடிவில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

MS Dhoni

இந்த நிலையில் துபாயில் இன்று நடைபெறும் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

மாலை 5 மணிக்கு போட்டி தொடங்கிய இப்போட்டி வங்காளதேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இப்போட்டியில் தல தோனிக்கு 200 வது போட்டியாகும் இதனால் இப்போட்டியில் இந்திய அணிக்கு தோனி கேப்டனாக உள்ளார்.

MS Dhoni

இந்திய அணியில் பல முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோஹித், தவான், பும்ரா, புவனேஷ்வர்குமார், சாஹல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

இந்திய அணியில் ராகுல், அம்பதி ராயுடு, தோனி, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், மனிஷ் பாண்டே, தீபக் சாஹர், குல்தீப், ஜடேஜா, கலீல், சித்தார் கவுல் ஆகியோர் விளையாடுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here