விஷாலின் அதிரடி அரசியலுக்கு பின்னால் என்ன நடந்தது தெரியுமா?

0
1825
விஷாலின் அதிரடி அரசியலுக்கு பின்னால் என்ன நடந்தது தெரியுமா?

ஆர்.கே.நகர் இடைதேர்தல் தேதி அறிவித்தவுடனே தொகுதி மக்களிடமிருந்து விஷாலுக்கு அழைப்புகள் வர தொடங்கியதாம். அவரிடம் பேசியவர்கள் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு ஆர்.கே.நகர் தொகுதியை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஓட்டுக்கேட்டு வரும் அரசியல்வாதிகள் வெற்றிபெற்ற பிறகு கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிடுகின்றனர். ஒவ்வொரு மழையின்போது வீடுகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்தத் தொகுதியில் எந்த வித அடிப்படைவசதிகளும் இல்லை. எனவே ஆர்.கே.நகர் தொகுதியல் நீங்கள் போட்டியிட வேண்டும் என்று கூறினார்களாம்.

விஷாலின் அதிரடி அரசியலுக்கு பின்னால் என்ன நடந்தது தெரியுமா?

அதன்பிறகு விஷால் தனக்கு நெருக்கமானவர்களிடம் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்தார். அப்போது அவர்களும் போட்டியிடுமாறு எனடறு தெரித்தனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு தி.நகரில் உள்ள காமராஜர் சிலை ராமாவரத்தில் உள்ள எம்.ஜிஆர். சிலை சிவாஜி சிலை அண்ணா நினைவிடம் ஜெயலலிதா நினைவிடம் ஆகிய இடங்களுக்கு சென்று மாலை அணிவத்து மரியாதை செலுத்தினார்.

கட்சி பாகுபாடின்றி இருப்பதை வெளிப்படுத்தவே அனைத்து தலைவர்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதாக அவருக்கு மிகவும் நெருக்கமானர்கள் தெரிவித்தனர். ஆர்.கே.நகரை பொறுத்தவரை விஷாலுக்கு அவர் சார்ந்த சமுதாய ஓட்டுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும், ஆர்.கே.நகரில் உள்ள மக்கள் பிரச்னையை மையப்படுத்தியே விஷால் பிரசாரம் செய்யவுள்ளார்.

கட்சிகள் மீதுள்ள மக்களின் வெறுப்பு, நடிகர், சமுதாய ஓட்டுகள் என்ற கூட்டல் கழித்தல் கணக்கு விஷாலுக்கு சாதகமாக அமையும் என்று சொல்கின்றனர் அவருக்கு வேண்டப்பட்டவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here