நண்பனால் பெருமையடைகிறேன்.. அஜித்-ஐ பாராட்டும் விவேக் ஓப்ராய்

0
1369

அஜித் குமார்.. தமிழ்நாட்டில் இந்தப் பெயருக்கு தனி மரியாதையும், ரசிகர்கள் படையும் எப்போதும் உண்டு. சிறுத்தை சிவா – அஜித் கூட்டணியில் அடுத்தத் திரைப்படமான விசுவாசம் படத்தின் வேலைகள் எவ்விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக நடந்து வரும் நிலையில் தல அஜித் குமார் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

அஜித்-க்குக் கார் பந்தயம், போட்டோகிராபி எனப் பல திறமைகளில் ஒன்று ஆளில்லா சிறிய ரக விமானத்தைத் தயாரிப்பதிலும், அதை இயக்குவதிலும் கைதேர்ந்தவர் தல.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெறும் மிகவும் புகழ்பெற்ற ‘மெடிக்கல் எக்ஸ்பிரஸ் 2018 யுஏவி சேலஞ்ச்’ எனும் போட்டியில் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கலந்துகொள்ள உள்ளது. இப்போட்டியில் இக்கல்லூரி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் அஜித் இக்கல்லூரியில் யுஏவி ரக ஆளில்லா விமானத்தை உருவாக்குவதில் மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் உதவி செய்வதற்காக இக்கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

இதன்படி ஆளில்லா விமானத்தை உருவாக்கும் இத்திட்டத்தில் அஜித் ஹெலிகாப்டர் டெஸ்டிங் பைலட் மற்றும் யுஏவி சிஸ்டம் அட்வைஸர் என்ற பதவி அளிக்கப்பட்டது மட்டும் அல்லாமல் 1000 ரூபாயைச் சம்பளமாகப் பெறுகிறார் அஜித். அவருக்கு கொடுக்கப்படும் கெளரவ சம்பளத்தை, எம்ஐடியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கே கொடுக்க முடிவு செய்துள்ளார் தல.

அஜித்தின் இப்புதிய வேலைக் குறித்து விவேகம் திரைப்படத்தின் வில்லன் மற்றும் அஜித்தின் நெருங்கிய நண்பருமான விவேக் ஓப்ராய் தனது டிவிட்டர் பக்கத்தில் அசத்தலான ஒரு பதிவை செய்துள்ளார்.

இதில்.. அஜித் அண்ணா மீண்டும் நிரூபித்தார், என் நண்பனால் பெருமையடைகிறேன். எம்ஐடி மாணவர்களுக்கு யூஏவி விமானத்தைக் கட்டமைக்க ஹெலிகாப்டர் டெஸ்ட் பைலட்டாகக் கல்லூரி நியமித்துள்ளது. எப்போதும் உதாரணமாக உள்ளார். உங்களுக்கு அதிகச் சக்தி கிடைக்க வேண்டும் அண்ணா என விவேக் ஒப்ராய்ப் பாராட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here