ஜல்லிகட்டு போட்டியில் போது இறந்தவரின் தங்கையை தத்தெடுத்த இளம் நடிகர்!

0
7189
ஜல்லிகட்டு போட்டியில் போது இறந்தவரின் தங்கையை தத்தெடுத்த இளம் நடிகர்!

அலங்காநல்லூருக்கு அடுத்தபடியாக ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற கிராமம் பாலமேடு. இங்கு கடந்த ஜன-15 மாட்டுப் பொங்கலன்று அமர்க்களமாக ஜல்லிக்கட்டு நடந்தது. இந்த நிகழ்வின்போது அங்கு வேடிக்கை பார்க்க நின்றிருந்தவர்களை நோக்கி ஆவேசமாக சீறிப் பாய்ந்த ஒரு காளை முட்டியதில் திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி கிராமத்தை சேர்ந்த காளிமுத்து (19) என்ற இளைஞர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே மரணம் அடைந்தார்.
இந்த நிலையில் அதே தினம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை கொண்டாடிக்கொண்டு இருந்த நடிகர் அபிசரவணன் இந்த செய்தியைக் கேள்விப்பட்டு உடனடி காளிமுத்துவின் இறுதிச் சடங்கிற்கான உதவியாக ஜந்தாயிரம் ரூபாயை நேரில் சென்று தந்துவிட்டு, மறைந்த காளிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பினார். மேலும் தனது அண்ணனை இழந்து படிப்பும் எதிர்காலமும் கேள்விக்குறியான நிலையில் உள்ள காளிமுத்துவின் தங்கை பத்து வயது சிறுமிக்கு இனி அண்ணன் ஸ்தானத்தில் இருந்து அவளின் படிப்புச் செலவை ஏற்றுக்கொண்டு படிப்பைத் தொடர உதவுவேன் என அறிவித்து நெகிழ வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here