சினிமாவே தோற்றுப்போகும்படி நெகிழ வைத்த ஒரு சம்பவம்!!. இங்கு ஒரு ஹீரோ

0
93

இப்படியான சம்பவங்கள் சினிமாவில் மட்டுமே நடக்கும். ஒரு பள்ளியில் படிக்கும் ஒட்டுமொத்த மாணவர்களும் ஒரு ஆசிரயரை வேறு பள்ளிக்கு விடாமல் போகாமல் போராட்டம் நடப்பது சமுத்தரக்கனியின் படங்களில்தான் நடக்கும் என்று நினைத்திருப்போம். ஏனென்றால் அரசுப்பள்ளிகளில் பெரும்பாலோனோர் க்டமைக்கு என்றுதான் வந்து சொல்லிக் கொடுக்கின்றனர்.

ஆனால் உண்மையான அன்புக்கு தாழ் உண்டா? பள்ளியில் ஏனோதானோவென்று பாடம் எடுக்காமல் உண்மையான அன்புடன் நகைச்சுவையோடு ஆங்கிலப்பாடம் எடுத்த பகவான் என்ற ஆசிரியரின் பணி வேறு ஊருக்கு மாற்றப்பட்டது. அதற்குபின் நடந்ததுதான் தமிழ் நாட்டின் செய்தியாகியது. ஆசிரியர் ஹீரோவாகினார். அதனைப் பற்றி விரிவாக காணலாம்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் இளம் வயது ஆசிரியர் பகவான். இவர் கடந்த 5 ஆண்டுகளாக அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் 5 வருடமாக அங்கு பணியாற்றியதால் பொது மாறுதலுக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொண்டார். அதில் ஆசிரியர் பகவானுக்கு வேறு பள்ளிக்கு மாறுதலுக்கான உத்தரவு வழங்கப்பட்டது.

இதனிடையே, ஆசிரியர் பகவான் இடமாறுதல் ஆக இருப்பது குறித்து தகவல் அறிந்த பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் பெரும் சோகம் அடைந்தனர். சிறந்த ஆசிரியரான பகவான் எங்கள் பள்ளியை விட்டு மாறுதலாகி வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் இடம் மாறுதல் உறுதி செய்யப்பட்டவுடன் அதன் எழுத்துமுறை கடிதத்தை வாங்க பள்ளி வந்த ஆசிரியர் பகவானை மாணவர்கள் அனைவரும் சூழ்ந்துகொண்டனர். அவரிடம் இந்த பள்ளியை விட்டு செல்ல வேண்டாம் என அழுது கொண்டே வேண்டுகோள் விடுத்தனர்

மாணவர்களை ஆழக்கூடாது என ஆறுதல் படுத்திவிட்டு, பள்ளியில் இருந்த ஆசிரியர் பகவான் வெளியே செல்ல முயன்றார். அப்போது மாணவர்கள் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு அவரை கட்டிப்படித்து கதறி அழுதனர். இதனால் ஆசிரியர் பகவானும் என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணீர் விட்டு அழுதார்.

வெகுநேரமாக நடந்த இந்த பாசப் போராட்டத்தில் சிக்கி தவித்த ஆசிரியர் பகவானும் கலங்கிய கண்களுடன் அவர்களிடம் இருந்து விடைபெற்று சென்றார்.

காண்போரை நெகிழ செய்யும் அந்த வீடியோ காட்சிகள் தொலைக்காட்சிகளிலும், சமூகவலைதளங்களிலும் வைரலாக பரவுகிறது.  பார்ப்பவர்களின் மனதையும் நெகிழ்ந்து கண்ணீர் விடச் செய்தது. இந்நிலையில், ஆசிரியர் பணி மாற்ற உத்தரவை மாவட்ட கல்வி அதிகாரி நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here