மனதை பிழிய வைக்கும் ஒரு கடிதம் !! வைரலான முகம் தெரியாதவரின் காதல்!!

0
1832

எத்தனை பழமைகள் ஓடி மறைந்து புதுமை வந்தாலும், காதல் மட்டும் என்றும் இளமையாக, இன்னும் இளமையாக, என்றும் இளமையாகவே இருக்கிறது. இருக்கும் இடத்திற்கு, பழகும் விதத்திற்கும் மாறுபடுமே தவிர, உணர்வுகள் எல்லாரும் பொதுவானதாகவே இருக்கிறது

அப்படித்தான் இங்கிலாந்தில் ஒரு சம்பவம் எல்லாருடைய மனதையும் உருக்கும் விதமாக அமைந்துள்ளது. அதனைப் பற்றி இங்கு காண்போம்.

இங்கிலாந்தில் பிர்மிங்கம் நகரத்தில் ஒரு படகு மையம் உள்ளது. பிவிஜிஎஸ் ரோயிங்க் என்று பெயர் (BVGS Rowing ). இந்த் படகு மையத்தின் நுழை வாயிலில் உள்ள கேட் அருகே ஒரு கடிதமும் ஒரு ரோஜாவும் வைக்கப்பட்டிருந்தது. அந்த கடித்ததை படித்த படகுத் துறை ஊழியர்கள் மனம் உருகி விட்டனர்.

அந்த கடிதத்தில்

” என்னுடைய கணவரின் அஸ்தி இந்த ஏரியில்தான் கரைத்துள்ளோம். நான் சர்க்கர நாற்காலியில் அமர்ந்திருப்பதால் என்னால் இந்த ஏரிக்கு செல்ல முடியவில்லை. இந்த படகு மையத்தின் நுழை வாயிலுள்ள கேட்டும் மூடி இருக்கிறது. அதனால் என்னால் உள்ளேயும் வரவில்லை.

நான் திரும்பவும் என் வீட்டிற்குச் செல்ல வேண்டும். இந்த கடிதத்தை பார்க்கும் யாரவது ஒருவர் அவருக்காக எடுத்து வந்த இந்த ரோஜாவை ஏரிக்குள் போட முடியுமா? என்று கேட்கப்பட்டிருந்தது. அதில் அவர் பெயரோ, எண்ணோ குறிப்பிட்டிருக்கவில்லை.

படகு மையத்தின் ஊழியர்கள் அவ்வாறே ரோஜாவை ஏரிக்குள் போட்டு புகைப்படம் எடுத்து, ட்விட்டரில் இதனைப் பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

” இக்கடிதம் இன்று மதியம் கேட்டில் மாட்டி இருந்தது. இந்த கடிதத்தில் எண்ணோ பெயரோ குறிப்பிடவில்லை. நீங்கள் யாராக இருந்தாலும் சரி.. உங்கள் கோரிக்கையின் படி, நாங்கள் ரோஜாவை நடு ஏரியில் விட்டு விட்டோம்” என்று அறிவித்திருந்தனர்.

இறந்த பின்னும் தன் கணவரை நினைத்து, நடக்க முடியாத நிலையிலும் கூட அவரின் நினைவாக வந்து காதலின் சின்னமான ரோஜாவை செலுத்த வேண்டும் என்ற ஆர்வம் காதல் இன்றி வேறெந்த உணர்விற்கும் வராது.

இந்த காலத்தில் காதல்,  காற்றுள்ள போது தூற்றிக் கொள்ளும் விஷயமாகத்தான் எதிர்பார்க்கப்படுகிறது.

பார்த்து பழகி, பிடிக்கவில்லையென்றால்  ப்ரேக் அப் செய்வது என்பது  நிச்சயம் காதலில் சேராது. அது வெறும் பழக்கம் என்றே சொல்லலாம்.

எதோ ஒரு உள்ளுணர்வினால் ஈர்க்கப்பட்டு, அவர்களிடம் எந்த மாதிரியான குணம் வெளிப்பட்டாலும், அதனை அப்படியே ஏற்று அன்பை மட்டுமே வெளிப்படுத்துவதுதான் காதலாக இருக்க முடியும்.

நேற்று சேட்டிங், இன்று டேட்டிங், நாளை ப்ரேக்கிங் அன்று அதி வேகமாக போகும் இளைய தலைமுறைகளுக்கு இப்படியான ஒரு ஸ்பீட் ப்ரேக் அவர்களை நிதானப்படுத்தும்.

மிக நேர்மையான காதல் அத்திப்பூத்தாற் போல்தான் நடக்கிறது. காதல் மிக அழகான விஷயம். உண்மையான உணர்ந்தவர்களுக்கு பலக் காதல்கள் இருக்காது. இன்னும் அதனை சரிவர உணராதவர்களே பல காதல்களில் விழுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here