தலை இல்லாமல் கிட்டத்தட்ட 2 வருடங்கள் வாழ்ந்த அதிசய கோழி!

0
207

தலை துண்டிக்கப்பட்டால் நாம் உயிருடன் இருப்பது என்பது சற்றும் சாத்தியம் கிடையாது.. அசைவ பிரியர்களே சற்றே யோசித்து பாருங்கள், நீங்கள் சாப்பிடுவதற்காக உங்களது தட்டில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு கோழி அசைந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்.. அன்று முதல் நீங்கள் அதனை சாப்பிடுவதையே விட்டு விட்டு தலை தெறிக்க ஓடி விடுவீர்கள் அல்லவா… அதே போல ஒரு சம்பவம் தான் 1945 ஆம் ஆண்டு நடந்திருக்கிறது.

செப்டம்பர் 10 ஆம் தேதி, 1945 ஆம் ஆண்டு ஒல்சென் மற்றும் அவரது மனைவி க்ளேரா ஆகியோர் தங்களது பண்ணையில் உள்ள கோழிகளை கொன்று சுத்தம் செய்து வந்தனர்.. அப்போது ஒல்சென் கோழிகளின் தலைகளை துண்டித்து போட்டுக் கொண்டிருந்தார். அவரது மனைவி இறந்த கோழிகளை சுத்தம் செய்து வந்தார்..

ஆனால் அதிசயமாக, ஒரு கோழி மட்டும் தலை துண்டிக்கப்பட்ட பிறகும் கூட உயிருடன் இருந்திருக்கிறது. அது வேகமாக அங்கும் இங்கும் ஓடியுள்ளது.. அந்த கோழி தனது செயல்களை நிறுத்தவே கிடையாது. சற்று நேரத்தில் அது அடங்கிவிடும் என்று நினைத்து இருக்கிறார்கள். ஆனால் அதன் உயிர் பிரியவில்லை.. அனைவரும் ஏதேனும் கெட்ட சக்தி அல்லது ஆவியாக இருக்கும் என்று நினைத்து பயந்து போய்விட்டார்கள்.

கெட்ட சக்தியா?

அந்த கோழியை அங்கு இருந்த ஒரு பழைய ஆப்பிள் பெட்டியில், அடைத்து வைத்திருக்கிறார்கள். தலை துண்டிக்கப்பட்ட கோழி இவ்வளவு நேரம் உயிருடன் இருப்பது எல்லாம் சாத்தியமா? என்று குழம்பினார்கள். மேலும் அந்த கோழியை மேலும் வெட்டினால், அதில் இருக்கும் கெட்ட சக்தி தங்களை தாக்கி விடுமோ என்றும் அவர்கள் பயந்தனர். இதனால் நாள் முழுவது இந்த கோழியை அடைத்து வைத்து விட்டு மறுநாள் இந்த கோழி இறந்திருக்கும் என்று நினைத்தார்கள்.

அதிசய பறவை

ஆனால் மறுநாள் அந்த பெட்டியை திறந்து பார்த்தால், என்ன நடந்தது தெரியுமா? அந்த கோழி அசைந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த அவர்களுக்கு ஒரே அதிர்ச்சி.. சரி, இந்த கோழியை எங்காவது விற்று விடலாம் என்று மார்க்கெட்டிற்கு சென்று இருக்கிறார்கள். அங்கே, எங்களிடம் அதிசயமான பறவை ஒன்று உள்ளது என்று விளம்பரப்படுத்தியதால் அங்கே கூட்டம் கூடியது. அது மட்டுமல்லாமல், தலையில்லாத இந்த கோழியை பற்றிய செய்தி காட்டுத்தீ போல பரவியுள்ளது.

 

புகழ் பரவியது

உள்ளூர் பத்திரிக்கை ஒன்று ஒல்சென்னை பேட்டி எடுத்து அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பையும் வெளியிட்டது. இதனால் இந்த கோழியை பற்றிய செய்தி இன்னும் வேகமாக பரவியது. அப்போது, பெருநகரத்தில் இருந்து இந்த கோழியை ஆய்வு செய்ய கொடுத்தால் அதற்கு தக்க சன்மானம் கொடுக்கிறோம் என்று தெரிவித்தது… ஆனால் ஒல்சென் வசிப்பது கிரமப்பகுதி அங்கிருந்து அந்த பெருநகரத்திற்கு செல்ல வேண்டும் என்றால், 300 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். எப்படி கொண்டு செல்வது? ஒருவேளை வழியில் கோழி இறந்துவிட்டால் பயணித்த செலவு நஷ்டம் தானே என்று பயந்தனர்.

அதிர்ஷ்டம்

அதுமட்டுமல்லாமல் கோழியும் ஆரோக்கியமான நிலையில் இல்லை.. அதே சமயம் பண்ணையில் இருந்து கிடைக்கும் வருமானமும் இவர்களுக்கு போதியதாக இல்லை. எனவே இவர்கள் ஆய்விற்காக கோழியை கொண்டு சென்று கொடுக்கலாம் என்று முடிவு செய்தனார். இந்த நிலையில் கோழி தலை இல்லாமல் 4 மாதங்கள் உயிருடன் இருந்து கொண்டிருந்தது.

 

ஆய்வுகள்

உட்டா (Utah) என்ற பல்கலைகழகத்திற்கு கொண்டு சென்று, அந்த கோழியை வைத்து பல்வேறு ஆய்வுகள் செய்தனர். அந்த கோழி வெட்டப்பட்ட கோணத்தினாலோ என்னவோ தான் அது உயிருடன் இருக்கிறது என்று சந்தோகித்து அவர்கள் பல கோழிகளை பல்வேறு கோணங்களில் வெட்டி பார்த்தனர். ஆனால் வெட்டிப்பட்ட கோழிகள் எல்லாம் சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தன. ஆனால் இந்த கோழி மட்டும் எப்படி உயிர் பிரியாமல் இருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.

கோழியின் பயணங்கள்

தலை இல்லாமல் பல மாதங்களை கடந்து கொண்டிருந்த அந்த கோழிக்கு மைக் என்று பெயர் சூட்டினர். மேலும் அந்த கோழியை நம்பிக்கையின் வடிவம் என்றும் அழைத்தனர். மைக் பற்றிய செய்தி பலருக்கு பரவியது. அமெரிக்காவிற்கு மைக் உடன் சுற்றுலா செல்லும் அளவிற்கு மைக் என்ற தலையில்லாத கோழியின் புகழ் பரவியது. கலிஃபோர்னியா, அரிசோனா என பல நகரங்களுக்கு இவர்கள் பயணித்தார்கள்.

எதிர்மறையான கடிதங்கள்

இந்த கோழியின் பயணம், அதன் செய்கைகள் என அந்த கோழியை பற்றிய அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டது. இந்த கோழிக்கு பல கடிதங்கள் வந்தன. வந்த கடிதங்கள் எதுவுமே நேர்மறையான கருத்துக்களை சொல்லவில்லை.. மேலும் இந்த மைக்கை கொன்று போடும் படியும், அது நம்மை அழிக்க வந்த தீய சக்தி எனவும் அந்த கோழியை குறிப்பிட்டு இருந்தார்கள்.

அதிர்ச்சி

மைக் உடன் சுற்றுபயணங்களை முடித்து விட்டு, ஹரிசோனா மாகாணத்தில் இருக்கும் ஃபோனிக்ஸ் என்ற இடத்தினை அடைந்தனர். அங்கே மைக் என்ற தலை இல்லாத கோழியின் உயிர் பிரிந்து விட்டது. கிட்டத்தட்ட 18 மாதங்கள் தலை துண்டிக்கப்பட்டு மைக் வாழ்ந்துள்ளது மிகப்பெரிய சாதனையாகும்.

உணவு கொடுக்கப்பட்ட முறை

ஒல்சென் நேரடியாக திரவ உணவுகளை கோழியின் தொண்டைப்பகுதியில் நேர நேரத்திற்கு ஊட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தார். உணவினை கொடுக்கவும், அதன் பின்னர் தொண்டை பகுதியினை சுத்தம் செய்யவும் சிரஞ்சினை பயன்படுத்தியுள்ளார். வாய் இருந்து இருந்தால், தொண்டை பகுதியினை எச்சில் கொண்டு சுத்தம் செய்திருக்கும். ஆனால் வாய் தான் இல்லையே, எனவே ஒல்சன் தான் தொண்டை பகுதியினை சுத்தம் செய்து விடுவார்.

எப்படி இறந்தது?

மைக் தனது இறகுகளை எங்கேயோ சிக்கிக் கொண்டிருப்பதை போல அடித்து கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டு ஓடிவந்து பார்த்தார் ஒல்சென். அப்போது மைக்கின் தொண்டை பகுதியில் ஏதோ சிக்கிக் கொண்டிருப்பது தெரிந்துள்ளது. இதனால் மைக் இறந்துவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here