கூகுளில் வேலை கேட்ட 7 வயது சிறுமி! சுந்தர் பிச்சை சொன்ன பதில் என்ன தெரியுமா?

0
290

கூகுளில் வேலை என்பது மற்ற நிறுவனங்களில் இருப்பது போல் தன வேலிய என்று
நினைத்துவிடாதீர்கள். காலையில் எழுந்து வேலைக்கு போகனுமே என்றெல்லம நினைக்க மாட்டீர்கள். எப்போதுடா செல்வோம் என்று வார இறுதியில் நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். அதனால்தான் அங்கு வேலை செய்வது நிறைய பேருக்கு ஒரு
பெருங்கனவு.

மிகவும் சொகுசான, படுக்கை வசதி கொண்ட அலுவலகம்.  டேபிள் சேரில் அமர்ந்துதான் வேலை செய்ய வேண்டும் என்ற கான்சப்டே கிடையாது. ஜாலியாக படுத்துக் கொண்டு, உலாவிக் கொண்டு, ஊஞ்சலில் அமர்ந்தபடி என வேலைப் பார்க்கலாம்.

வேலை செய்யும்போது தூக்கம் வந்தெதென்றால் சென்று தூங்கி புத்துணர்வு பெற்று மீண்டும் வேலை செய்யலாம்.

கேஃபடேரியா என்பது பேச்சுக்குதான். அங்கு இல்லாத உயர் ரக உணவுவகைகள்,
ஐஸ்க்ரீம், சாக்லேட் இனிப்பு வகைகள் இல்லை. அனைத்தும் இலவசம்.
அதோடு நீங்கள் மேல் தளத்திலிருந்து கீழ் தளத்திற்கு வர படிக்கட்டுகளில்தன இறங்க
வேண்டுமென்பதில்லை. சறுக்கு பலகை கூட இருக்கிறது. குஷியாக அதில் சறுக்கிக்
கொண்டு வருவதால் மனம் உற்சாகமாகவும், வேடிக்கையாகவும் இருக்கும் என்று அங்கு வேலை செய்பவர்கள் கூறுகின்றனர்.

அப்படி இவ்வளவு சொகுசான கம்பெனியைப் பற்றி இங்கிலாந்தி ஒரு சிறு
கேள்விப்பட்டிருப்பாள் போல. அவளுக்கும் அங்கு வேலிய செய்ய வேண்டுமென  ஆசை வந்துவிட்டது.

அவள் பெயர்.அவர் பெயர் க்ளோயி பிரிட்ஜ்வாட்டர்.அவர் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ
வான தமிழர் சுந்தர் பிச்சை அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்…

“என் பெயர் க்ளோயி நான் வளர்ந்ததும் கூகுள்ல வேலை செய்ய ஆசப்படுகிறேன்
எனக்கு சாக்லேட் பாக்டரியில் வேலை செய்யவும் பிடிக்கும்.ஒலிம்பிக்கில் நீச்சல்
பண்ணவும் ஆசை.கூகிள்ல வேலை கிடைச்சா பீன் பேக்ல அமர்ந்து சறுக்கி
விளையாடலாம்னு சொல்றாரு அப்பா.

எனக்கு கம்ப்யூட்டர் ரொம்ப பிடிக்கும்.எங்கிட்ட டேப்லெட் இருக்கு அதுல நான் கேம் விளையாடுறேன்.அப்பா தந்த கேம் ல ரோபோவ கட்டத்திற்கு மேலயும் கீழயும் நகர்த்தினால் கம்ப்யூட்டரைப்பத்தி அதிகமா தெரிஞ்சுக்கலாம்னு அப்பா சொல்றாரு..கூகுள்ல வேலைக்கு சேரணும்னா உங்களுக்கு
அப்ளிகேஷன் அனுப்பணும்னு அப்பா சொல்றாரு.ஆனா எப்படி அப்ளிகேஷன் அனுப்புறதுனு தெரியல.

லெட்டர் எழுதினா போதும்னு கூட அப்பா சொன்னாரு.என் லெட்டர படிச்சதுக்கு
நன்றி. நா இத தவிர இன்னும் ஒரு லெட்டர் மட்டும் தான் எழுதியிருக்கேன்.அது
கிறிஸ்துமஸ்காக என் அப்பாவுக்கு,”என்று தனது கடிதத்தை முடிக்கிறாள் அந்த சுட்டிக்
குழந்தை.”

அத்தனை வேலைப்பளுவில் சுந்தர் பிச்சை அந்த கடிதத்தை படிக்க நேர்ந்த போது அந்த
சிறுமியின் தன்னம்பிக்கை அவருக்கு பிடித்திருந்ததால் அவளுக்கு அவரே ஒரு கடிதத்தில் எழுதியிருக்கிறார். இது தன்னம்பிக்கை தருவதாகவும், ஊக்குவிப்பது போலவும் இருப்பதால் இந்த கடிதம எல்லாருக்குமே ஒரு நல்ல பாடமாக இருக்கும். அவருடைய பதில் கடிதம் பின்வருமாறு…

“நீ கடினமாக உழைத்தால் உன் ஒலிம்பிக் நீச்சல் கனவிலிருந்து கூகுளின் வேலை

கிடைப்பது வரை எல்லாம் நிஜமாகும்.. உன் பள்ளிப்படிப்பிற்கு பிறகு உன்னிடமிருந்து
அப்ளிகேஷன் வரும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று எழுதியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here