96- பட த்ரிஷாக்கு கோடானு கோடி நன்றி ஏசப்பா!! விஷயம் என்ன தெரியுமா?

0
6026

த்ரிஷா ஒவ்வொரு தடவையும் ட்ரெண்ட் செட்டராக இருப்பது சுவாரஸ்யமான விஷயம்.

இத்தனை ஏறக்குறைய 16 வருடங்கள், அதுவும் மாறாத இளமையுடன் த்ரிஷா முண்ணனி நடிகையாக வலம் வருவது உண்மையில் புருவத்தை உயர்த்தச் செய்கிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனை நடிகைகள் வந்து போய் விட்டார்கள். ஆனால் த்ரஷாவும் சரி, நயன்தாராவும் சரி, எவருக்கும் தங்களின் முதல் இடங்களை விட்டுத் தராமல் தொடர்ந்து முதல் இடங்களில் இருப்பது எளிய விஷயம் அல்ல. பாராட்ட வேண்டிய விஷயம் இது. ஆச்சரியமும், மலைப்பும் கூட.

இன்னும் தங்கள் கால்ஷீட்டை பிஸியாக வைத்திருப்பது பல இளம் நடிகைகளுக்கு ஆச்சரியம் கலந்த பொறாமை என்று சொல்லலாம்.

இவர்களின் கதாப்பாத்திரங்களின் தேர்வு சரி, வெறெந்த நடிகைகளுக்கும் இப்படியான செலக்ஷன் கிடைப்பது அரிது. எப்படி இப்படியான திரைப் படங்கள் கிடைக்கிறது என எல்லாருக்கும் காதில் புகை வராத குறைதான்.

த்ரிஷாவின் விண்ணை தாண்டி வருவாயா படம் வந்ததும், அவருடைய காட்டன் சேலைகளும் ஹோம்லி சுடிதார்களும் ட்ரெண்டாகின. அது போல் எல்லா கடைகளிலும் உடுப்புகள் குவிந்து மள மள அவென விற்கத் தொடங்கின.

இப்போது அவரது 96 படம் முழுவதும் அவர் ஒரே காஸ்ட்யூமில்தான் வருவார். அவர் உடுத்தி வந்த வெந்தய நிற குர்தி, ஜீன்ஸ் மற்றும் அவருடைய துப்பட்டாவும் எல்லாரையும் வசீகரித்தது.

மிகவும் சிம்பிளான காட்டன் குர்தி, அந்த சால்வை போன்ற துப்பட்டாவும் எல்லா இளம் வயதினர் கண்களையும் பறித்தது.
பெண்களின் நாடித் துடிப்பை உணர்ந்த ஜவுளி கடைகள் போட்டி போட்டுக் கொண்டு அந்த காஸ்ட்யூமை தயாரிக்கின்றது.

இப்போது இந்த தீபாவளிக்கு இந்த காஸ்ட்யூம்தன பிரபலம். எல்லா கடைகளிலும் 96 பட த்ரிஷாவின் உடைகள்தான் காட்சி பொம்மைகள் உடுத்தி இருக்கின்றன.

இந்த உடையால் கிடைத்த நல்ல விஷயம் எல்லா பெண்களும் துப்பட்டா போட ஆரம்பித்திருக்கிறார்கள் என நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.
த்ரிஷாவின் அந்த காஸ்ட்யூம் அமேசானில் கிடைக்கிறது. அமோகமாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறதாம் அமேசான் தவிர கடைகளிலும் இன்றைய டிமாண்ட் 96 காஸ்ட்யூம் தானாம்.

30 வருடங்களுக்கு முன்னால் 80 களில் நதியா கொண்டை, நதியா தோடு, வளையல்கள் என அப்போது மிகவும் பிரபமலமாக பேசப்பட்டு வந்தன. அவைகள் புதிய ட்ரெண்டாக வலம் வந்தன.அதற்கு பிறகு குஷ்பு இட்லி என உணவுகளுக்கு குஷ்புவின் பெயர் ட்ரெண்டாகியது.

இப்போது பல வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவிற்குதான் இந்த ட்ரெண்ட் ராசி உருவாகி உள்ளது. அவருடைய விண்ணை தாண்டி வருவாயா விற்கு பிறகு வேறு எந்த நடிகைகளின் உடையும் பெரிதாக பேசப்பட வில்லை.

அந்த படத்திற்குப் பிறகு 96 படத்தின் உடைகள் ட்ரெண்டியாக வலம் வருகிறது.  எனவே இனி வரும் படங்களில் த்ரிஷாவின் உடைகள் ஏனோ தானாவென்று எடுக்காமல் கூடுதல் கவனம் எடுத்தால் நதியா  காஸ்ட்யூம் என்று உருவானது போல் இன்னும் பல வருடங்கள் கழித்தும் த்ரிஷா காஸ்ட்யூம் பேசப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here