சிந்து சமவெளி நாகரிகம் அழிந்ததற்கு காரணம் கண்டுபிடிப்பு!

0
1251

சிந்து சமவெளி நாகரிகம் சுமார் தொள்ளாயிரம் ஆண்டுகள் நீடித்த வறட்சியால் அழிந்ததாக கோரக்பூர் ஐஐடி மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

ஆயிரம் ஆண்டுகளுக்காக மழைப்பொழிவு நிலவரம் குறித்து கோரக்பூர் ஐஐடியை சேர்ந்த நிலவியல் மற்றும் புவி இயற்பியல் துறை மாணவர்கள் ஆய்வுகளை நடத்தி வந்தனர். சுமார் நான்காயிரத்து முன்னூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வடமேற்கு இந்தியப் பரப்பில் கடுமையான வறட்சி நிலவியிருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கடும் வறட்சி சுமார் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு மேல் நீடித்துள்ளது. இதை அடுத்து அங்கு வசித்த மக்கள் மழைப்பொழிவு காணப்பட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர ஆரம்பித்துள்ளனர். கங்கை, யமுனை பள்ளத்தக்குகளுக்கு பெருவாரியான மக்கள் இடம்பெயர்ந்தனர்.

கிழக்கு மற்றும் மத்திய உத்திரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், தெற்கு குஜராத் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here