88வயதில் கனவை நிறைவேற்றிய தேவராஜன்.. அதிர்ந்துபோன பென்ஸ் நிறுவனம்..!

0
3628

நம்முடைய குழந்தை பருவம் அல்லது இளமைக் காலத்தில் பல கனவுகள் நமக்கு இருக்கும், வாழ்க்கை ஓட்டத்தில் பல கனவுகள் மாயமாகிவிடும் ஆனால் சில கனவுகள் நாம் வாழ்நாள் முழுவதும் இருக்கும். இப்படிப்பட்ட கனவுடன் வாழ்ந்து வந்தவர் தான் தேவராஜன்.

ஆண்களின் கனவு

88 Year Old Tamil Nadu Farmer buys his Dream Benz car: Heart Warming Story | 88வயதில் கனவை நிறைவேற்றிய தேவராஜன்.. அதிர்ந்துபோன பென்ஸ் நிறுவனம்..!

பொதுவாக ஆண்களின் கனவுகள் எப்போதும் ஒரு பொருளை சேர்ப்பதிலேயே இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது, அதில் ஆடம்பர கார், சூப்பர் பைக், வீடு ஆகியவை மிகப் பிரபலமாக உள்ளது.

தேவராஜன் கண்ட கனவும் இதே தான்.

தேவராஜன்

இதேபோலத் தான் தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் 88 வயதாகும் தேவராஜன் தனது இளமை பருவத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் கார் வாங்கக் கனவை கண்டார். விவசாயி என்றாலும் தனது கனவை நிறைவேற்றக் கடுமையாக உழைத்து, விடாப்பிடியாகத் தன் கனவு காரை வாங்கியுள்ளார்.

8 வயது

தேவராஜன் முதல் முறையாகத் தனது 8 வயதில் மெர்சிடிஸ் பென்ஸ் காரை பார்த்துள்ளார். பார்த்த உடனேயே அந்தக் கார் மீது காதல் பொங்கியது.

இதற்காகக் கடந்த 80 வருடமாகத் தனது கனவு காரை வாங்க வேண்டும் எனப் பணத்தைச் சிறுக சிறுக சேமித்துள்ளார்.

சென்னை

இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் உள்ள டிரான்ஸ் கார் இந்தியாவில் 33 லட்சம் ரூபாயில் மெர்சிட்ஸ் பென்ஸ் பி கிளாஸ் காரை வாங்கித் தனது கனவை நிறைவேற்றியுள்ளார்.

காதல்

இதுகுறித்துத் தேவராஜன் கூறுகையில், இந்தக் காரை பார்த்த உடனேயே அதன் மும்முனை அடையாளம் என்னை அதிகளவில் கவர்ந்தது எனக் கூறினார்.

தேவராஜன் விரும்பிய அந்தப் பென்ஸ் காரை அவருக்கு வழங்குவதில் டிரான்ஸ் கார் நிறுவனம் மகிழ்ச்சி அடைவது மட்டும் அல்லாமல் கேக் வெட்டி, தேவராஜன் தன் கனவு காரில் உட்கார்ந்த தருணம் அனைத்தையும் வீடியோவாக வெளியிட்டு அசத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here