மனைவிக்கு 55,000 ஆடைகள் வாங்கிக் குவித்த காதல் கணவர்..!

0
1108

மனைவியின் ஆசையை நிறைவேற்ற ஒவ்வொரு கணவனும் தன் வாழ்நாள் முழுவதும் போராடுகிறார் என்றால் மிகையில்லை. இப்படியிருக்கும் நிலையில் சில மாதங்களுக்கு முன் முன்னணி தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் தங்கள் திருமணத்தில் 100 புடவை வேண்டும், 100 சுடிதார் வேண்டும் எனக் கேட்டபோது தமிழ்நாடே அதிர்ந்து போனது. அதுமட்டும் அல்லாமல் அந்தப் பெண்களைப் பலரும் சமுக வலைதளத்தில் கிண்டல் அடித்தது மறக்க முடியாதது.

ஆனால் இங்கு நடந்திருப்பதைப் பார்த்த கிண்டல் செய்தவர்கள் அனைவரும் வாய் அடைத்துப்போவார்கள்.

ஜெர்மனியைச் சேர்ந்த 83 வயதான பால் பிராக்மேன் என்பவர் தன காதல் மனைவி ஒரு முறை அணிந்த ஆடையை இரண்டு முறைக்கு மேல் அணியக்கூடாது என்று திட்டமிட்டு சுமார் 55,000 டிசைனர் கவுன்களை வாங்கிக் குவித்துள்ளார்.

இந்த 55,000 டிசைனர் கவுன்களையும் தனது வீட்டில் போதிய இடம் இல்லாத காரணத்தால் தன் வீட்டிற்கு அருகில் 50 அடி நீளம் உள்ள கண்டைனர்களில் ஆடைகளை வைத்துள்ளார்.

இந்தக் காதல் ஜோடி அரிசோனாவின் கிழக்கு மீசா பகுதியை சேர்ந்தவர்கள், பல வருடங்களுக்கு முன் ஜெர்மனியில் ஒரு நடன அரங்கத்தில் சந்தித்துள்ளது. இரவு முழுவதும் நடனம் ஆடிய அவர்கள் காதலில் விழுந்தது மட்டும் அல்லாமல் திருமணம் செய்துகொண்டு சுமார் 61 வருடங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பால் பிராக்மேன் தொடர்ந்து கவுன்களை வாங்குவதைக் கவனித்த முன்னண் அமெரிக்க டிபார்ட்மென்ட் ஸ்டார் ஆன சியர்ஸ் இவருடன் கூட்டணி வைத்து விற்பனை செய்து வருகிறது.

இவர் இந்த ஆடைகளைப் பெரும்பாலும் தள்ளுபடி விற்பனை மற்றும் கடைகளை மூடும் போது அறிவிக்கப்படும் விற்பனை ஆகியவற்றில் தான் வாங்கியுள்ளார்.

பெரும்பாலும் வல்லரசு நாடுகளில் ஆடைகளின் டிசைனர்களுக்கு டிரென்ட் உள்ளது, அந்த டிரென்ட் முடிந்த பின்பு அதை யாரும் வாங்கமாட்டார்கள் அத்தகைய சூழ்நிலையில் தான் பால் பிராக்மேன் குறைந்த விலைக்கு ஆடைக்களை வாங்குவார்.

இப்படிக் கவுன்களை வாங்கிக் குவித்த பால் பிராக்மேன், மொத்தம் 55,000 கவுன்களை வாங்கினார். ஆனால் ஒருகட்டத்தில் ஆடைகளை வைக்க இடம் இல்லாத காரணத்தால் 2014ஆம் ஆண்டு முதல் புதிதாக ஆடைகளை வாங்குவதை நிறுத்திவிட்டார் பால் பிராக்மேன்.

இதுமட்டும் அல்லாமல் இடபற்றாக்குறையின் காரணமாகச் சுமார் 7000 கவுன்களையும் விற்றுள்ளார் பால். இதன் மூலம் தன் பிரம்மாண்ட அலமாரியில் தற்போது 48,000 கவுன்கள் உள்ளது. இதில் 200 கவுன்கள் மிகவும் ஸ்பெஷல் ஆனது எனவும் பால் பிராக்மேன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here