பொங்கலன்று தமிழகத்தில் நடக்கும் 8 பெருமிதமான விஷயங்கள்!

0
16304

தமிழகத்தின் ஆதி நாளில் இருந்து கொண்டாடப்பட்டு வரும் தனிப்பெரும் திருவிழா பொங்கல். தமிழர்கள் திருநாளாக தமிழகம் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ் உள்ளிட்ட நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் உலக மக்களால் பிரம்மிப்பாக கவனிக்கப்பட்டும் 8 விசேடமான விஷயங்களை இங்கே பார்ப்போம்.

1. ஒரே நாளில் தமிழர்கள் அனைவரும் புத்தாடை அணிந்திருப்பது வெளிநாட்டு வாழ் மக்களுக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக தமிழக ஆடவர்கள் வேட்டி சட்டையில் கம்பீரமாக இருப்பதாக எண்ணி வியக்கிறார்கள்.

2. சில காலங்களுக்கு முன்பு பொங்கலை சில விரோதிகள் மதம் சார்ந்த விழாவாக மாற்ற எண்ணியபோது, தமிழர்கள் சமத்துவ பொங்கலை கொண்டாடத் தொடங்கினர்.

3. கிருத்துவ தேவாலயங்களில் கரும்பு வைத்து பொங்கல் இட்டு கொண்டாடி வருகின்றனர். இசுலாமியர்கள் தங்கள் வீடுகளில் சர்க்கரை பொங்கலிட்டு, 16 வகையான காய்கறிகளை சமைத்து சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்டு மகிழ்கின்றனர்.

4. மாட்டுப்பொங்கல் நாளில் மாடுகள் மற்றும் அதனுடனான கால்நடைகளுக்கு அலங்காரம் செய்து, வழிபாடு செய்வது என்பது இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் காணப்படாத வழக்கம். மாடுகள் மதசார்பற்றவை, விவசாயப் பெருங்குடியின் நண்பன். ஆதி தமிழினத்தின் தோழன்.

5. ஆற்றுப்படுகைகளிலும், கடற்கரையிலும் ஊரே ஒன்றுகூடி மகிழும் காணும் பொங்கலை போல உலகின் வேறு எந்த மூலையிலும் உங்களால் பார்க்கவே முடியாது.

6. மார்கழியின் கடைசி நாளான போகியில், அக்காலத்தில் கிராமப்புறங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது. அப்போது அழுவது எதனால் என்பதை வரலாற்று அறிஞர்கள் ஆராய்ந்தபோது ‘புத்தர் இறந்த தினம்’ என்று கண்டறியப்பட்டது.

7. பொங்கல் திருநாளில் தமிழின ஆடவருக்கு மேலும் கம்பீரம் சேர்க்கும் விதமாக நடக்கும் ஜல்லிக்கட்டை உலகின் வேறு எந்த இடத்திலும் காணமுடியாது. சீறிப்பாயும் காளைகளை தமிழர்கள் வீரத்துடன் அடக்கி வெற்றி வாகையும் சூடுவர்.

8. பல நூறு நூற்றாண்டு வரலாற்று பெருமை வாய்ந்த கலாச்சாரம், பண்பாடு மற்றும் மொழியை தமிழர்கள் விடாது தொடர்ந்து காத்து, அவைக்கு தடையென்று வரும்போது எதிர்த்து போராடி அதை உடைப்பதையும் தமிழகத்தில் மட்டுமே பார்க்க முடியும் என்று சொன்னால் மிகையாகாது.

ரஜினி அரசியல், வைர மலை, பருவமழை… பஞ்சாங்க கணிப்புகள் எல்லாம் பலிக்கின்றன!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here