திருவண்ணாமலை மகாதீபத்தை பற்றிய பிரம்மிக்கவைக்கும் 7 உண்மைகள்!

0
291

கார்த்திகை தீபத்திருநாள் மிக மிக தொன்மை வாய்ந்த தமிழர் பண்டிகை ஆகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்த தீபத்திருவிழா. இதை கி.மு. 25௦௦ ஆண்டுகளுக்கு முன்பான நமது சங்க இலக்கியங்களும் கூட சுட்டிக்காட்டுகின்றன. இந்நாளில் திருவண்ணாமலை மீது ஏற்றப்படும் பரணி தீபமும், மகாதீபமும் மிகவும் பிரசித்தி பெற்றது. கோடிகணக்கான சிவ பக்தர்கள் இந்நாளில் திருவண்ணாமலையில் கூடி ஈசனை கோஷமிட்டு வழிபாடு செய்வர். அண்ணாமலைக்கு அரோகரா, அருணாச்சலனுக்கு அரோகரா என பக்தர்களின் கோஷம் விண்ணைப் பிளக்கும். இந்த மகா தீபத்தின் சிறப்புகளையும், பலன்களையும்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

திருவண்ணாமலை மகாதீபத்தை பற்றிய பிரம்மிக்கவைக்கும் 7 உண்மைகள்!

  1. கார்த்திகை மாதத்தில் அதிகாலை 5 மணியளவில், அதாவது பரணி நட்சத்திரத்தில் கோவிலின் 5 மடக்குகளில் ஏற்றி வைக்கப்படும் அகல் தீபமே பரணி தீபம் ஆகும். இந்த 5 மூலைகளும் இறைவனின் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐவகையான தொழில்களை, திருமுகங்களை குறிக்கிறது.

2. பரணி தீபம் காலை ஏற்றப்படும்; மகா தீபம் மாலை ஏற்றப்படுகிறது. ஈசன் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாக நிற்கும் கோலத்தையே இந்த மகா தீபம் குறிக்கிறது. திருவண்ணாமலை உச்சி கடல் மட்டத்தில் இருந்து 2668 அடி உயரம் கொண்டது.

திருவண்ணாமலை மகாதீபத்தை பற்றிய பிரம்மிக்கவைக்கும் 7 உண்மைகள்!

3. மகா தீபம் ஏற்றப்படும் விளக்கு கொப்பரை செம்பு மற்றும் இரும்பால் செய்யப்பட்டது. இதில் விளக்கேற்ற சுமார் 3௦௦௦ கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. 1௦௦௦ மீட்டர் காடா துணியை திரியாக கொண்டு விளக்கிடப் படுகிறது.

திருவண்ணாமலை மகாதீபத்தை பற்றிய பிரம்மிக்கவைக்கும் 7 உண்மைகள்!

4. 1668ம் ஆண்டு வேங்கடபதி ஐயர் வெண்கல கொப்பரையை செய்து உபாயமாக அளித்தார். பின் 1991ம் ஆண்டில் இருந்து இரும்புக் கொப்பரை பயன்படுத்தப்படுகிறது. இது பக்தர்களால் செய்துகொடுக்கப்பட்டது.

திருவண்ணாமலை மகாதீபத்தை பற்றிய பிரம்மிக்கவைக்கும் 7 உண்மைகள்!

5. இந்த கொப்பரையை மலையின் உச்சியில் வைக்கும் உரிமையும், இந்த கொப்பரையில் விளக்கேற்றும் உரிமையும் பர்வத ராஜகுலத்தினருக்கு மட்டுமே உள்ளது. இவர்கள் செம்படவர்கள் என அழைக்கப்படுவர். செம்படவர்கள் சிவன் படையினர் ஆவர். இந்த குலத்தை சேர்ந்தவர்களே வருடா வருடம் தீபத்திருநாளன்று முறை செய்து மலை மீது மகா தீபத்தை ஏற்றி வைப்பார்.

திருவண்ணாமலை மகாதீபத்தை பற்றிய பிரம்மிக்கவைக்கும் 7 உண்மைகள்!

6. மலையில் தீபம் ஏற்றப்படுவதற்கு முன்பாக கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு தீப தரிசனம் காண்பிக்கப்படும். பிறகு அர்த்தநாரீஸ்வரர் வந்து தரிசனம் தருவார். இவரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் கடல் அலை போல அலைமோதும்.

திருவண்ணாமலை மகாதீபத்தை பற்றிய பிரம்மிக்கவைக்கும் 7 உண்மைகள்!

7. கார்த்திகை தீபத்தன்று விரதம் இருந்து மாலையில் அண்ணாமலை மகா தீபத்தை தரிசனம் செய்வதுடன், கிரிவலம் மேற்கொண்டால் கர்ம வினைகள், பாவங்கள் தீர்ந்து இறையருள் பெருகி, வாழ்வில் சுந்தரம் பொங்கும் என்பது பண்டைய ஐதீகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here