காட்டுத்தீயில் மாட்டிக்கொண்டால் பத்திரமாக தப்பித்துக்கொள்வது எப்படி?

0
1070

இயற்கையை நாம் நாடிச் செல்லும்போது, சில நேரங்களில் அது நமக்கு பலப்பரீட்சைகளை சந்திக்க வைக்கலாம். தற்போது தேனீயில் ஏற்பட்ட காட்டுத்தீ சம்பவத்தைப் போல. மிக மிக மோசமானது, யாராலும் எதிர்பார்க்க முடியாதது இந்த காட்டுத்தீ. குறுகிய நேரத்தில் பல ஏக்கர்களுக்கு பரவி, வானளவுக்கு சுவாலையை வீசும் அளவிற்கு அபாயகரமானது. இதன் தாக்கத்தைக் கண்டு அஞ்சி பலியானோர் எண்ணிக்கை அதிகமே. ஆபத்து நெருங்குல் சூழலில் கவனமாக யோசிக்காமல், திடீரென மனம் போன போக்கில் சென்று மரணித்தவர்களும் உண்டு.

குரங்கணி மலை காட்டுத்தீயில் சிக்கியவர்களில் சிலர், உயிரை காத்துக்கொள்வதற்காக வேகமாக ஓடிச்சென்று மிகப்பெரிய குழிகளில் விழுந்து இறந்தார்கள் என்பதே உண்மை. இடர்பாடுகளை சந்திப்பதில் மக்கள் மிகவும் மோசமாக செயல்படுவதைத்தான் இச்சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன. எனவே நீங்கள் விபத்துக் காலங்களில் அதிலிருந்து மீள்வதற்கான பயிற்சிகளை, மன உறுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த மன உறுதியானது உங்களது சரியான திட்டமிடலை பொறுத்தே அமையும்.

சரி, ஒருவேளை நீங்கள் காட்டுத்தீக்குள் சிக்கிகொண்டால் உங்களால் என்ன செய்யமுடியும்? எப்படி அந்த ஆபத்தில் இருந்து உங்களை காத்துக்கொள்வீர்கள்? எப்படி உங்களது சகாக்களையும் மீட்பீர்கள்? என்பதை இங்கே திட்டமிடல் வடிவமாக கொடுத்திருக்கிறோம். படித்து, பகிர்ந்து பயன் அடையுங்கள்.

#1 முதலாக தீ வளையத்திற்குள் சிக்குபவர்கள் அதிகள் பாதிக்கப்படுவது மன அளவில்தான். அதீத அதிர்ச்சிக்கு உள்ளாகிறார்கள். ஆபத்தின் நெருக்கடியை உணர்வதற்கு முன்பாகவே மனதிடத்தை இழக்கிறார்கள். எனவே பாதிக்கபபட்டவர்கள் பதற்றப்படுவதை தவிர்க்க வேண்டும். உடன் இருக்கும் நீங்கள்தான் பதற்றத்தை குறைக்கும் விதமாக பேச்சு கொடுக்க வேண்டும். நம்பிக்கை தெரிவிக்க வேண்டும்.

#2 தீவிபத்தை சந்திப்பவர்கள் அதிலிருந்து விடுபட தெறித்து ஓடுவார்கள். அவ்வாறு ஓடினால் மிகப்பெரிய தவறு. வேகமாக ஓடும்போது உடலின் மீதான காற்றோட்டம் வேகமாக அதிகரித்து உடலில் தீப்பிடிக்கும். எனவே உங்களது குழுவை ஒருங்கிணைத்து, காட்டுத்தீயில் இருந்து பொறுமையாகவும், மிக கவனமாகவும் விடுபட வேண்டிய மனநிலையை அடைய வேண்டும்.

#3 காட்டுத்தீ காற்று அல்லது நிலப்பரப்பு என இரண்டு வழிகளில் மட்டும்தான் பரவும். நிலப்பரப்பில் பரவும்போது நீங்கள் தப்பித்துக் கொள்வதற்காக பல வழிகள் கிடைக்கும். காற்றின் மூலம் பரவும்போது மிக அபாயகரமானதாக இருக்கும். நிலப்பரப்பில் இருந்துதான் தீ காற்றின் மூலம் அடுத்தடுத்த பகுதிகளுக்கும் பரவும். எனவே ஆரம்பத்திலேயே தப்பித்துக் கொள்வது சிறந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here