முதுகு வலியை விரட்ட 6 வீட்டு வைத்திய முறைகள்!

0
776

தற்போது உடலில் வரும் நோய்களில் பெரும்பாலோனோருக்கு இருப்பது முதுகு வலி. இந்த வலியானது நமக்கு வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதுகு அல்லது கழுத்து அல்லது மற்ற இடங்களில் ஏதாவது வலி ஏற்பட்டால், அந்த வலியை சரிசெய்ய நாம் உடலை ஏதேனும் ஒரு வித்தியாசமான நிலையில் நீண்ட நேரம் வைத்திருப்போம். மேலும் தற்காலிகமாக அந்த வலியை நீக்க மேற்கொண்ட அந்த நிலையை எப்போது வலி ஏற்பட்டாலும் பின்பற்றுவோம். ஆகவே அவ்வாறு வித்தியாசமான நிலையில் வைப்பது உடலின் பல பகுதியை பாதித்து, வலி அல்லது பிடிப்பு போன்வற்றை உண்டாக்குகிறது.

முதுகு வலியை விரட்ட 6 வீட்டு வைத்திய முறைகள்!

எப்படி உண்டாகிறது?

நமது தண்டுவடம் மற்றும் முதுகிற்கு போதுமான ஊட்டச்சத்தானது அவசியம். அப்படியிருந்தால் தான் தண்டுவடம் நன்கு வலிமை பெற்று நேராக இருக்கும். அதிலும் ஊட்டச்சத்துக்களில் வைட்டமின்கள் மற்றும் கால்சியம் போன்றவை குறைவாக இருந்தால், எலும்புகள் மற்றும் தசைகள் வலிமையிழந்து, பின் இறுதியில் அதிகமான வலியை உண்டாக்கும்.

இந்த முதுகு வலியை விரட்ட எளிதான சில வீட்டு வைத்தியங்களை இங்கே பட்டியல் இட்டுள்ளோம். படித்தும் பகிர்ந்தும் பயன்பெறுங்கள்.

1. சிறிது உலர்ந்த இஞ்சி பொடியுடன் இரண்டு கருப்பு மிளகு, தேவையான அளவு வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் முதுகு வலி குறையும்.

 

2. 5 பல் பூண்டை தோல் நீக்கி 50 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து, 20 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி முதுகு வலியுள்ள இடத்தில் 10 நிமிடம் தேய்த்தால் முதுகு வலி குறையும்.

 

3. வாதநாராயணன் இலைகளை எடுத்து விளக்கெண்ணெயில் வதக்கி முதுகில் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் முதுகுவலி குறையும்.

 

4. வெற்றிலைகளை எடுத்து சாறு பிழிந்து தேங்காய் எண்ணெயில் கலந்து வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் இடுப்பு வலி மற்றும் முதுகு வலி குறையும்.

 

5. முதுகு வலி அதிகமாக இருப்பவர்கள் 5 மிளகு, 5 கிராம்பு மற்றும் 1 கிராம் சுக்கு சேர்த்து நீர் விட்டு தேநீர் செய்து தினமும் 2 வேளைகள் குடித்து வந்தால் முதுகு வலி குறையும்.

 

6. 3 கிராம் வெட்டிவேரின் புல்லை எடுத்து 2 கிராம் கற்கண்டு சேர்த்து நன்றாக அரைத்து 1 டம்ளர் பாலில் கலந்து குடித்து வந்தால் முதுகு வலி குறையும்.

 

இந்த 6 மூலிகைகளை வீட்டில் வளர்த்தால் ஒரு நோயும் உங்களை நெருங்காது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here