தற்கோலையை தூண்டுகிற இந்த 5 இடங்கள் இந்தியாவில் எங்கிருக்கு தெரியுமா?

0
36

இந்தியாவில் அமானுஷ்யங்கள், பலி, மாந்த்ரீகத்திற்கு குறைச்சலில்லை. எதில் முன்னேறுகிறோமோ இல்லையோ இது போன்ற விஷயங்களில் போட்டிப் போட்டுக் கொண்டு ஒருவரைப் போல் மற்றவர் செய்கிறார்கள்.

அப்படித்தான் இந்தியாவில் சில இடங்கள் தற்கொலைக்கு பெயர் போன இடங்கள்.இவற்றில் தொடர்ச்சியாக மக்கள் தற்கொலை செய்ததால் அங்கே ஆவி நடமாடுவதாகவும், சிலர் பார்த்ததாகவும் திகிலைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. வாங்க அந்த இடங்களை நாமும் தெரிஞ்சுக்கலாம்.

சஞ்சய் வான்- டெல்லி :

சஞ்சை வான் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாதலமாகும். சுமார் 10 ஏக்கர் பரப்பில் ஏரியுடன் கூடிய பசுமைத் தோட்டமாம். ஆனால் அங்கு இரவில் யாருக்கும் பார்ப்பதற்கு தைரியம் இல்லை. காரணம் அங்கு பல மேதை மற்றும் புனிதர்களி கல்லறைகள் இருக்கின்றது.

அங்கு ஒரு பெண் மற்றும் இன்னும் பலருடைய ஆவிகள் உலவுவதால் அங்கு இரவில் செல்லும்போது ஏதோ இனம் புரியாத உணர்ச்சிகள் மேலோங்குவதாக அங்கு சென்றவர்கள் கூறுகின்றனர். அதோடு அமானுஷ்ய குரல்களை கேட்பதாக அங்கிருக்கும் காவலாளிகள் கூறுகின்றனர்.

கிராண்ட் பாரடி டவர்- மும்பை :

மும்பையில் புகழ்பெற்ற உயர்ந்த கட்டிடங்களில் கிராண்ட் பாரடி டவர் மிக முக்கியமானது. பின்னர் அந்த கட்டிடம் தற்கொலைக்கும் பெயர் போனது. அந்த கட்டிடத்திலிருந்து ஒர் வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகவும் அதிர்ச்சிக்குள்ளானது.

அவர்களை தொடர்ந்து அவர்களது மகன், மருமகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதன் பின் அந்த பகுதியில் இருக்கும் உயர்ந்த கட்டடங்களில் சுமார் 20 க்கும் அதிகமானோர் தற்கொலையை செய்துள்ளனர். இரவில் அவர்கள் ஆவி
நடமாடுவதாக அங்கு ஒரு கதை நிலவுகிறது. இதனாலேயே குறிப்பிட்ட நேரத்திற்குப் பின் இரவில் அங்கு நடமாடுவதையே தவிர்க்கின்றனர்.

ஷனிவார் வாடா கோட்டை -புனே

பூனேயிலிருக்கும் ஷனிவார் வாடா கோட்டையில் 1828 ஆம் ஆண்டு உண்டான தீ விபத்தில் ஒரு இளவரசி உயிர் இழந்ததகாவும், அவள் ஆவி இப்போதும் சுற்றுவதாக ஒரு கதை இருக்கிறது. பௌர்ணமி அன்று அங்கு முனுமுனுக்கும் சப்தம் கேட்பதாக கூறுகின்றனர். அது போலவே, ஒரு இளவரசர் தன் அத்தை பெண்ணிய விரும்பினார். அதனைப் பிடிக்காமல் அவரின் அத்தை காவலாளிகள் கொண்டு அந்த
இளவரசரை கொன்றதால் அவரின் ஆவி உலாவுவதாக மற்றொரு கதையும் இந்த் கோட்டைக்கு உண்டு.

சவுத் பார்க் கல்லறை- கல்கத்தா :

கொல்கத்தாவிலுள்ள சவுத் பார்க் கல்லறை , அதன் கட்டிடக் கலைக்காக பிரசித்தி பெற்றது. இந்தோ- சாராசெனிக் பண்பாட்டை கூறும் வகையில் இத கட்டிடடக்கலை விளங்குவதாக சொல்கிறார்கள். இந்த கல்லறைத் தோட்டத்தில் பலரின் ஆவிகள் அலைவதாகவும், அவை அங்கு செல்பவர்களை தொந்தரவு செய்வதாகவும் கூறுகின்றனர். அங்கு செல்பவர்கள் மூச்சுத் திணற மற்றும் மயக்கத்தை
உணர்ந்ததாக சொல்கிறார்கள்.

டவ்-ஹில் – மேற்கு வங்காளம்:

மேற்கு வங்களத்தில் உள்ள டவ் ஹில் ஔர் மலைப்பகுதியாகும். இங்கு கண்கவரும் நீர் வீழ்ச்சிகளும், மலைத் தொடர்களும், ரயில் சவாரிகளும் நம்மை ஈர்த்தாலும், அங்கெல்லம செல்லும்போது நம்கூடவே ஏதோ அமானுஷ்யம் தொடர்வதும் பயணிப்பதும் நம்மால் உணர முடியும்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்த விக்டோரியா உயர் நிலைப் பள்ளியில் இரவுகள் கூக்குரலும், சிரிப்புச் சத்தங்களும் அப்பள்ளியில் கேட்டிருக்கிறது. அந்த அமானுஷ்யம் இன்று வரை தொடர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here