சிவன் பார்வதியிடம் சொன்ன, மனிதர்கள் ஒருபோதும் செய்யக் கூடாத 5 பாவங்கள்!!

0
91

பெண்கடவுள்  சதி தனது இரண்டாவது பிறவியில் பார்வதியாக ராஜா ஹிமாவத் மற்றும் ராணி மைனாவிற்கும் பிறந்தார். சிறு வயதிலிருந்தே சிவன் மீது காதல் கொண்டிருந்தார். நாரதர் தனது ஞான ஸ்ருஷ்டியின் மூலம், பார்வதி எப்படியும் சிவனை மணம் புரிவார் எனக் கண்டார். அதேபோல் பல்வேறு சங்கடங்களையும், போராட்டங்களையும் தாண்டி பார்வதி சிவனை மணந்தார்.

உண்மைக்குப் பொருள் சிவன். மிகவும் கூர்மையான அறிவு கொண்ட கடவுள். அமைதி, மற்றும் ஆற்றல் மிகுந்த சக்தி படைத்தவர். அவர் பார்வதியிடம் உலகம் தோன்றிய ரகசியத்தையும் மனிதனின் பிறப்பு ரகசியங்களையும் பற்றி கூறிக் கொண்டிருந்தார்.

அப்படி அவர் கூறியதில் மனிதர்கள் ஒருபோதும் செய்யக் கூடிய 5 செயல்கள் பற்றியும், அதனால் வரும் நீங்க முடியாத பாவங்களையும் பற்றியும் கூறுகிறார். நாமும் அவர் கூறிய உண்மைகளை கண்டறிவோம்.

பொய் ஒரு பாவச் செயல் :-

மிக உயர்ந்த நல்ல செயல் எதுவென்றால் உண்மை. உண்மையை அடிப்படையாக வைத்துதான் உலகம் தோன்றியுள்ளது. அப்படி உண்மையை எவர் தொடர்ந்து கடைபிடிக்கிறாரோ அவர் உயர்ந்தவர். எவர் ஒருவர் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறாரோ அவர் அடுத்த ஜென்மத்திலும் தனது பாவத்தை சுமந்து கொண்டு செல்கிறார்.

நீதான் உனகக்கு சாட்சி :-

மனிதன் தன்னை எவரும் கவனிக்கவில்லை என்ற தைரியத்தில்தான் தவறுகளை செய்து கொண்டிருக்கின்றான். ஆனால் உண்மையில் அவன் ஆத்மா உங்கள் செயல்களை கவனிக்கின்றது. அவன் செய்யும் தவறுகளை யாரும் பார்க்கவில்லையென்று மறைக்கப்பார்க்கிறான். ஆனால் இயற்கை தரும் அதற்குரிய தண்டனைகளிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது. ஆகவே மனிதனின் தவறுகளுக்கு அவனுடைய ஆத்மாவே மிகப்பெரிய சாட்சி.

மனம், உடல், பேச்சு :

மனம், உடல் மற்றும் உங்கள் பேச்சினால் எவருக்கும் தீங்கு செய்யக் கூடாது. இந்த மூன்றுமே மிக மோசமான பாவங்களாகும்.

மேலே சொன்ன 5 பாவங்களையும் மனிதன் செய்வதற்கு அஞ்ச வேண்டும் என சாஸ்திரத்தில் இருக்கின்றது என சிவன் பார்வதியிடம்
கூறுகின்றார்.

மேலும் சொன்ன உண்மைகள் :

இந்த உலகத்தில் தற்காலிகமாக இருக்கும் அற்ப சந்தோஷங்களுக்காக மனிதன் உண்மைகளை தன்வசம் மறைத்துக் கொள்கிறான். ஒரு மாய உலகத்துக்குள் பிணந்து கொள்கிறான். இதுவெல்லாம் நிரந்தரமெல்ல என்பதை எப்போது உணர்கிறானோ அப்போது அவற்றிலிருந்து வெளிவரும் போது ஆத்மா பாரங்களிலிருந்து விடுபடுகிறது.

அது போல் எதன் பணம், காதல், பொருள் என தனக்கு பிடித்தவை மீதெல்லாம் பற்று கொண்டிருக்கிறான். . இந்த மாயைகள்தான் தனது கைக்குள் இருந்தால் வெற்றி என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றான். இதுதான் அவனுடைய மிகப்பெரிய தோல்வி.
எவனொருவன் வெற்றி, தோல்வி பந்தம் என எல்லாவ்ற்றையும் சம நிலையில் வைத்து வாழ்கிறானோ அவனுடைய செயல், மனம்
வெற்றி காண்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here