பரியேறும் பெருமாள்- சர்வ தேச அளவில் அங்கீகாரம்!!

0
539

கோவா வில் சர்வ தேச திரைப்பட விழா நடக்க இருக்கிறது. அவ்விழாவில் உலகளவில் பல மொழிப் படங்கள் திரையிடப்படும். அவ்வகையில் நமது தமிழிலிருந்து 4 படங்கள் கலந்து கொள்கின்றன என்பது தமிழக ரசிகர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி.

வரும் நவம்பர் மாதம் 20 முதல் 28 ஆம் தேதி வரை இந்த திரைப்பட விழா நடக்கவிருக்கிறது.. இந்த திரைப்பட விழாவில் சுமார் 200 படங்கள் திரையிடப்படுகின்றன. இது 49 வது திரைப்படவிழா என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தியன் பனோராமா பிரிவில் நமது 4 தமிழ்படங்கள் தேர்வாகி இருக்கிறது.
1.பரியேறும் பெருமாள்
2.பேரன்பு
3. டூ-லெட்
4. பாரம்.

இதில் பரியேறும் பெருமாளைத் த்வைர மீதி 3 படங்களும் இன்னும் திரையரங்குகளில் திரையிடப் படவில்லை.

பரியேறும் பெருமாள் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ஜாதியை முன்னிறுத்து எடுக்கப்பட்ட இந்த படத்தை அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். இக்கதை வெகுவாக பேசப்பட்டது.

ரசிகர்களும் இந்த படத்தை நல்ல விதமாக விமர்சித்தனர். கதிர், ஆனந்தி ஆகிய இருவரும் நாயகன், நாயகியாக நடித்தனர். இந்த படத்தை பா. ரஞ்சித் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

டூ லெட் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே பல வெளி நாட்டு திரைப் பட விழா, மற்றும் போட்டிகளில் வெற்றிப் பெற்று உலகளவில் கவனம் பெற்றது.

இது போல் நல்ல திரைப்படங்கள் தமிழில் வருவது ஆரோக்கியமான போக்கு. எப்போதும் மசாலா, பன்ச், நாலு  ஃபைட், டூயட் என வணிகத்தை மட்டும் குறி வைத்து எடுப்பதை தவிர்த்து திரைப்படங்களை வெறும் பொழுது போக்காக மட்டும் எண்ணாமல், அது அந்தந்த காலத்தை பறை சாற்றும் கலையாக நாம் பார்க்கும் கண்ணோட்டமும் மாற வேண்டும்.

நல்ல படங்கள் எடுத்தால் ரசிகர்கள் என்றுமே வரவேற்பார்கள் என்பதற்கு இந்த படங்கள் எல்லாம் எடுத்துக் காட்டு. மசாலா படங்கள் மட்டுமே ரசிகர்கள் விரும்புவரகள் என்ற எண்ணத்தை தகர்த்து எறிந்து அறம், அருவி, பெரியேறும் பெருமாள் என இந்த படங்கள் எல்லாம் வசூல் ரீதியாகவும் ஹிட் அடித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here