உ.பி. அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 30 குழந்தைகள் பரிதாப பலி!

0
470

உத்திரபிரதேச மாநிலத்தின் கோரக்ப்பூரில் உள்ள பி.ஆர்.டி. அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாட்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 30 பிஞ்சுக் குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறை ஏன்?

அரசு மருத்துவமனை நிர்வாகம் ஆக்சிஜன் உருளைகளை சப்ளை செய்யும் வினியோகிஸ்தர்களிடம் அரசு ரூ. 66 லட்சம் பாக்கி வைத்துள்ளது. கடன் பேரில் தொடர்ந்து ஆக்சிஜன் உருளைகளை வாங்கி வந்துள்ளது. பணம் கொடுக்காத காரணத்தால் ஆக்சிஜன் உருளைகள் சப்ளை செய்வதை விநியோகிஸ்தர்கள் நிறுத்திக்கொண்டனர். இதனால்தான் மருத்துவமனையில் ஆக்சிஜன் உருளைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

யோகியிடம் மறைத்த உண்மை:

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் இம்மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து அவரது கவனத்திற்கு கொண்டுச் செல்லப்படவில்லை. குறிப்பாக கோரக்ப்பூர் யோகியின் சொந்த தொகுதி ஆகும்.

மோசமான மருத்துவமனை:

உத்திரபிரதேச மாநிலத்தில் இயங்கி வரும் மோசமான அரசு மருத்துவமனைகளில் பி.ஆர்.டி. மருத்துவமனையும் ஒன்றாகும். சரியான கட்டமைப்பு வசதிகளோ, மருத்துவ சிகிச்சை வசதிகளோ இந்த மருத்துவமனையில் இல்லை என பொதுமக்களே புகார்களை தெரிவித்து வந்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகமும் கடமைக்கு கடை விரித்து வந்திருக்கிறது.

224 குழந்தைகள் பலி:

கடந்த 2016ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இருந்து செப்டம்பர் வரை Encephalitis என்ற நோயால் பாதிக்கப்பட்டு, இந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 920 குழந்தைகளில் 224
குழந்தைகள் பரிதாபமாக பலியான சம்பவமும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here