ஜெ. இறந்த நாளன்று நீங்கள் இந்த 3 விஷயங்களை கவனித்தீர்களா?

0
147351

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் மரணம் குறித்த எத்தனையோ மர்மங்களும் கேள்விகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எண்ணற்ற பேட்டிகளை ஊடகங்கள் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் மக்களின் கேள்விகளுக்கான பதில் இதுவரையிலும் கிடைக்கவில்லை. ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்ட நேரத்திலும் குழப்பம் ஏற்பட்டது. டிசம்பர் நான்காம் தேதியன்று இரவில் அவருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. அப்போதுதான் அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. அடுத்த நாள் ஜெ.வின் உண்மையான தொண்டர்களால் அப்போலோ மருத்துவமனை முற்றுகையிடப்பட்டதை போல உணரப்பட்டது. நேரம் கடக்க கடக்க அங்கே தொண்டர்களின் கூட்டமும், அவர்கள் எழுப்பும் கூச்சல்களும் அதிகரித்தன. மாலை 4:30 மணியளவில் அம்மையார் இறந்ததாக திடீர் அறிவிப்பு வெளியாகியது. அதிகாரப்பூர்வமற்ற அறிவிப்புதான் என்றாலும் அந்த சமயத்தில் குறிப்பிடும்படியாக 3 விடயங்கள் நடந்தன. அவற்றைத்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

ஜெ. இறந்த நாளன்று நீங்கள் இந்த 3 விஷயங்களை கவனித்தீர்களா?
கோப்புப்படம்

விடயம் 1:

டிசம்பர் 5ம் தேதி மாலை 4:30 மணிக்கு ஜெயலலிதா இறந்ததாக அறிவிப்புகள் வெளியானதும், ஊடகங்கள் ஜெ.வின் மரணச் செய்திகளை வழங்க ஆரம்பித்தன. ஜெயா நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு சற்று நேரத்திற்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் ஜெயா நியூஸ் இணைய நேரலையில் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஸ்லைட் ஷோ காட்டப்பட்டிருந்தது.

ஜெ. இறந்த நாளன்று நீங்கள் இந்த 3 விஷயங்களை கவனித்தீர்களா?
கோப்புப்படம்

விடயம் 2:

மாலை 4:40க்குள் ராயப்பேட்டை, ஔவை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் முன்பு நிறுவப்பட்டுள்ள கட்சியின் கொடிக் கம்பத்தில் அ.தி.மு.க.வின் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அப்போலோவின் முன்பாக திரண்டிருந்த தொண்டர்கள் சிறு கலவரத்தை நிகழ்த்தி நிலைமையை மேலும் பதட்டப்படுதினர்.

ஜெ. இறந்த நாளன்று நீங்கள் இந்த 3 விஷயங்களை கவனித்தீர்களா?
கோப்புப்படம்

விடயம் 3:

இரவு 7 மணியளவில் சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இருந்து புனிதநீர் அப்போலோவிற்கு எடுத்துவரப்பட்டது. அதற்கு முன்பாக அப்போலோவின் முன் பகுதியில் இருந்து தொண்டர்களும், பொதுமக்களும் நூறு மீட்டர் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்தனர். சி.ஆர்.பி.எஃப். படைவீரர்களும், காமாண்டோக்களும், பவுன்சர்களும் அங்கே குவிக்கப்பட்டிருந்தனர்.

ஜெயலலிதா மரணித்த செய்திகள் அதிகாரப்பூர்வமற்ற அறிவிப்பு என கருதப்பட்ட நிலையில் இரவு 11:3௦ மணிக்கு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவின் மரணத்தை விதித்த மருந்து இதுதான்… வெளியானது உண்மை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here