ஜெ.வின் இறப்பிற்கு பின் சசிகலா குடும்பத்தில் நிகழ்ந்த மரணங்கள்!

0
5759

முன்னாள் முதல்வரான ஜெயலலிதா இறந்த அடுத்த 2 வருடங்களுள் சசிகலாவின் குடும்பத்திலும் உறவினர்கள் வட்டத்திலும் ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த மரணங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. போயஸ் தோட்ட இல்லத்திற்கு நெருக்கமாக இருந்த மகாதேவன், சந்தானலட்சுமி மற்றும் சசிகலாவின் கணவர் நடராஜன் என 3 பேர் வரிசையாக உயிரிழந்துள்ளனர். ஜெயலலிதாவின் இறப்பும் சஸ்பென்சாகவே இருக்கும் நிலையில் மறுபக்கம் நீதி விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. ஜெயலலிதாவுடன் இணைப்பிரியா தோழியாக திகழ்ந்த சசிகலா 55 பக்கங்கள் கொண்ட பிராமணப் பத்திரத்தில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்து விசாணை சமிஷனுக்கு அனுப்பி இருக்கிறார். இதற்கிடையே தொடர் மரணங்கள் அவரது நிம்மதியை குலைத்து வருகின்றன. இதனால் ஜெயலலிதாவின் நினைவலைகள் என்னவோ சொல்ல விரும்புகிறது போலும்.

ஜெயலலிதா மரணம்:
கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதியன்று ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 75 நாட்களுக்கும் மேலாக அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வெளிநாட்டு டாக்டரும், எய்ம்ஸ் டாக்டர்களும், அப்போலோ டாக்டர்களும் அவருக்கு சிகிச்சைகளை புரிந்து வந்தனர். ஆனால் சற்றும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார் என்பதை நாம் அறிவோம். ஆனால் மருத்துவமனைக்குள் நிகழ்ந்த எவ்வித செயல்பாடுகள் குறித்த இமியளவு தகவலும் கூட எந்த இடத்திலும் கசியவில்லை.

சோதனையில் சின்னம்மா:
சசிகலாவாக இருந்தவர் திடீரென சின்னம்மாவாக தன்னை வெளிப்படையாக அறிவித்துக்கொண்டார். உடனடியாக அரசியல் பிரவேசத்தையும் அவர்
அறிவிக்க, சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்கும் சென்றுவிட்டார். அண்ணன் மகன் சுதாகரன், அண்ணி இளவரசி ஆகியோரும் உள்ளே போனார்கள். நடந்த சோதனைகள் இதுதான் என்றால், அதற்கடுத்து நேர்ந்த வேதனைகள் அபாரமாக இருந்தது. அடுத்தடுத்து மன்னார்குடி வட்டத்தில் வரிசையாக 3 பேர் மரணித்துள்ளனர். அடுத்தப் பக்கத்தில்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here