ஓ மை காட்… 256 வயது தாத்தா சொல்லும் ரகசியத்தை கேளுங்கள்!

0
457

100 வயதை தாண்டிய வெகு சில தாத்தா பாட்டிகளையே நாம் அபூர்வமாகவும் ஆச்சரியமாகவும் பாப்போம். ஆனால் டபுள் செஞ்சுரி + ஒரு சில்வர் ஜூப்ளியை தாண்டி வாழ்க்கை வண்டியை உற்சாகமாக ஓட்டிகொண்டிருந்தார் ஒரு சீனா தாத்தா. அவரது பெயர் லீ ச்சிங்-யுன். சீனாவின் கலாசார அறிவுரையாளராகவும், மூலிகை மருத்துவராகவும் பணிபுரிந்துள்ளார். இவருக்கு 24 மனைவிகள் இருந்துள்ளனர். தாத்தா தன் பரம்பரையை உருவாக்குவதிலும் டபுள் செஞ்சுரி அடித்தார். 200 குழந்தைகளை பெற்று பெருவாழ்வு வாழ்ந்துள்ளார் என்றால் தலைக்கு மேல் ஆச்சரியக்குறி முளைக்கிறது அல்லவா?

ஓ மை காட்... 256 வயது தாத்தா சொல்லும் ரகசியத்தை கேளுங்கள்!

உணவுக் கலாசாரம்:

பூமியில் காலப்போக்கில் மனிதனின் வாழ்நாள் குறைந்துகொண்டே வருவதற்கு காரணம் மாறிய உணவுப்பழக்கமும், வாழ்வியல் மாற்றங்களும் தான். அந்த காலத்தில் நம் நாட்டிலும் நூறு வயது நூற்றைம்பது வயதுக்கு மேல் வாழ்ந்தார்கள். குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மனிதர்கள் முன்னூறு-நானூறு வருடங்களுக்கு மேல் வாழ்ந்தார்கள் என்றும் கூட கேள்விப்பட்டிருக்கிறோம். இன்று நாற்பது வயதிலேயே ஏதாவது ஒரு நோயை வாங்கிக்கொண்டு, அதனுடன் போராடி எழுபதுக்குள் டிக்கெட் வாங்கிக் கொள்கிறோம்.

பொன்னான 3 விதிகள்:

நாமும் நிறைய ஆண்டுகள் வாழ்வதற்கு லீ ச்சிங்-யுன் தாத்தா சொல்லியிருக்கும் ரகசியமோ வெரி சிம்பிள் தான்.
1. ஆமையை போல அமருங்கள்
2. புறாவை போல நடந்துச் செல்லுங்கள்
3. நாயை போல தூங்குங்கள்
4. அமைதியான உள்ளத்தை கொண்டிருங்கள்

  • ஆமையை போல அடக்கத்துடன் அமர வேண்டும். கால் மேல் கால் போட்டோ அல்லது நினைத்த பாவங்களிலோ அமரக் கூடாது. பெண்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் கர்பப்பை பாதிக்கப்படும் என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
  • புறாவை போல மெதுவாக அடி வைத்து நடக்க வேண்டும். குதிகாலை தரையில் வேகமாக வைகாமலும், தொம் தொம் என சத்தம் வராமலும் நடக்க வேண்டும். படிகளில் ஏறும்/இறங்கும்போதும் மெதுவாகவே அடி வைக்க வேண்டும்.
  • நாயை போல நன்கு உறங்க வேண்டும். நாய்கள் ஒரு நாளுக்கு எட்டு முதல் பன்னிரண்டு மணி நேரம் வரை இடைவெளிகளுடன் உறங்கும். அதைப் போல, நாமும் ஓய்வெடுக்க வேண்டும்.
    எவ்வகை உணவுகளை சாப்பிட வேண்டும்?

மூலிகை உணவுகள்:

உடலியக்கச் செயல்பாடுகளுக்கு ஏற்ப நாம் எவ்வகை உணவுகளை உட்கொண்டுவந்தால் நீண்ட நாட்கள் உயிர் வாழலாம் என விளக்குகிறார் லீ ச்சிங்-யுன். லீ தாத்தா பெரும்பாலும் மூலிகை உணவுப்பொருட்களை மட்டுமே சாப்பிட்டு வந்தார். தென்கிழக்கு சீனாவில் கிடைக்ககூடிய சின்செங்கு, கோஜி பெர்ரி ஆகிய மூலிகை உணவுகளையும், அரிசியிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒயின் பானத்தையும் எடுத்துக்கொண்டார். இந்த உணவுப்பழக்கம் கொடுத்த பரிசுதான் 250 ஆண்டுகளுக்கான பெருவாழ்வு.

அவர் சாப்பிட பயன்படுத்திய மூலிகை உணவுகளை நாம் தேடிப்போக அவசியமில்லை. நம் வீட்டு சமையலறையிலும் பல்வகை மூலிகைகள் நிறைந்துள்ளன. இலவங்கம், அன்னாச்சி மொட்டு, கிராம்பு, கடுகு, மிளகு, பெருங்காயம், வரமிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா என சொல்லிக்கொண்டே போகலாம்.

அம்மா சமைக்கும்போது, அந்த பொங்கல்ல மிளகு போடாத… ரசத்துல பூண்டு போடாத… சாம்பார்ல கறிவேப்பிலை போடாத…என்று கட்டளையிடுவோம். அம்மா நம் மீது அக்கறையுடன் இவற்றை போட்டிருந்தாலும், சாப்பிடும்போது தட்டிலிருந்து இந்த மூலிகைகளை ஒதுக்கி வைக்கிறோம். அன்றாட நாம் உணவுத்தட்டில் சந்திக்கும் இந்த பொருட்களின் மருத்துவ மகத்துவங்களைப் பற்றியும் அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. குறிப்பாக கறிவேப்பிலையும் கொத்தமல்லியும் வெறும் வாசனைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள். இவ்வாறாக நமது உணவுப்பொருட்கள் மீதான தவறான புரிதலால், ஆரோக்கியத்தை இழந்து நமது வாழ்நாட்களின் அளவை குறைத்துக்கொண்டுள்ளோம் என்பதுதான் உண்மை.

நாமும் ‘லீ’ தாத்தா சொல்லியிருக்கும் அறிவுரைகளின் படி வாழ்க்கையை இனிதே தொடங்கி வாழ்ந்துப் பார்க்கலாமே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here