2018 புத்தாண்டு ராசிபலன்: எந்த ராசிக்கு திடீர் பணக்காரர் ஆகும் யோகம் உண்டு?

0
39006

எல்லாம் சுபமே:
சனி கிரகத்தை ராசிநாதனாக கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களே, இந்தாண்டு உங்களுக்கு எல்லா விதத்திலும் சிறந்த ஆண்டாக இருக்கப் போகிறது. குடும்பம், பொருளாதாரம், கல்வி என எல்லா விடயங்களிலும் நல்லதே நடக்கும்.

ரஜினியின் பிறந்தநாள் ஜாதகம்... பல கேள்விகளுக்கு பதில் உள்ளே!முடிவுகள்:
சனி பதினொன்றாம் இடத்திலும், ராகு பகவான் ஆறாம் வீட்டிலும், குரு பகவான் ஒன்பதாம் வீட்டிலும் சஞ்சரிக்க உள்ளார்கள் என்பதால் நீங்கள் எடுக்கும் எவ்வித முடிவுகளும் முடிவில் சுபமாகவே முடியும்.

பொருளாதாரம்:
பணம் என்ற விடயத்தை பொறுத்தவரை அதன் வரவு அதிகமாகவே இருக்கும். சுபச் செலவுகள் மட்டுமே செலவாகும். வீண் செலவுகள் இந்தாண்டு குறையும். பணத்தை சம்பாதிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். சேமிப்பு என்றால் என்ன என்பதை இந்த வருடம்தான் உங்களுக்கு கற்றுக்கொடுக்கும்.

யோகம்:
வாழ்க்கையை நீங்களும், உங்களை வாழ்க்கையும் புரிந்து கொள்ளக்கூடிய காலக்கட்டம் இது என்பதால் உங்களது தேடலும், ஆர்வமும் அதிகரிக்கும். எதிர்ப்புகளும், தடைகளும் உங்களை அசைக்க கூட முடியாது. சிலருக்கு திடீர் பணக்காரர் ஆகும் யோகமும் உண்டாகும். ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.

வாழ்க்கை:
குடும்ப வாழ்க்கைக்கு மிக உகந்த ஆண்டாக 2018ம் ஆண்டு இருக்கப்போகிறது. குறிப்பாக கணவன்-மனைவி இடையே ஆன தாம்பத்திய நெருக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. ஒருவருக்கு ஒருவர் சரியாக புரிந்துகொண்டு வாழ்க்கையை வாழத் தொடங்குவீர்கள். அன்பும் கடல் போல பெருகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here