2018ல் அசத்தலாக அறிமுகமாக உள்ள கார்கள்!

0
1588

கார் மீது அதிகம் பிரியம் கொண்டவர்களுக்கு பிராண்டட் கார்கள் எப்போழுதுமே தனி ஈர்ப்பு தான். புதிய மாடல் கார்கள் அறிமுகப்படுத்திக் கொண்டு வருகிறது. அப்படி 2018ல் வர இருக்கும் சூப்பர் கார்கள்.

ரெனால்ட் க்விட் ரேசர்:
அடுத்த ஆண்டு ரெனால்ட் நிறுவனம் அறிமுகபடுத்தியிருக்கும் க்விட் ரேஸர் விலை 4.50 லட்சம். 10000சிசி கொண்டது இது லிட்டருக்கு 23.01 கிலோமீட்டர் கொண்டது. பல சிறப்பு அம்சங்கள் கொண்ட இந்த மாடல் 2018 முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

 

மாருதி ஸ்மால் கார் (க்விட் ரிவல்):
மாருதி சுசூகி நிறுவனம் 2018ம் ஆண்டு பிப்ரவரியில் அறிமுகப்படுத்தும் மாருதி ஸ்மால் கார் (க்விட் ரிவல்) ரூ. 3 முதல் ரூ. 5 லட்சம் வரை இதன் விலை இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. கே சிரியஸ் பெட்ரோல் இன்ஜின் 800சிசி கொண்டது.

 

நியூ ஜென் ஹுண்டாய் சான்ட்ரோ:
சான்ட்ரோவை மறு வடிவமைப்பில் மீண்டும் அறிமுகப்படுத்த உள்ளது. இது ரூ. 4 முதல் ரூ. 6 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் இன்ஜின்.

 

மாருதி ஸ்விப்ட்:
ரூ. 5 முதல் ரூ. 8 லட்சம் வரையில் அறிமுகப்படுத்த உள்ள மாருதி ஸ்விப்ட்டில் பல மாறுதல்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் விவிடி பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டிடிஐஎஸ் டீசல் இன்ஜினை கொண்டுள்ளது.

 

நியூ மாருதி இர்டிகா:
பல்வேறு வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் நியூ மாருதி இர்டிகா மாடல் கார் ரூ. 7 முதல் ரூ. 10 லட்சம் வரையில் விலை நிர்ணயம் செய்துள்ளது.

 

ஹுண்டாய் எலைட் ஐ20 பேஸ்லிஸ்ட்:
2018ல் ஹுண்டாயின் நிறுவனத்தின் எலைட் ஐ20 பேஸ்லிஸ்ட் என்ற மாடல் காரின் விலை ரூ. 5 முதல் ரூ. 7 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

மாருதி சியாஸ் 2018:
மாருதியின் நிறுனத்தின் 8.5 முதல் ரூ. 11.50 லட்சத்தில் மாருதி சியாஸ் 2018 என்ற மாடல் காரை அறிமுகப்படுத்துகிறது. பலவேறு சிறப்பு அம்சங்கள் கொண்டதாக இந்த கார் இருக்கும் என தெரிவிக்பட்பட்டுள்ளது.

 

மாருதி சுசூகி ஜிம்மி:
முக்கிய கார் நிறுவனமான மாருதி இது மாருதி சுசூகி ஜிம்மி என்ற கார் மாடலை அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்தகிறது. இதன் விலை ரூ. 5.70 முதல் ரூ. 7 லட்சம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here