2018 ராசிபலன்: விருச்சிக ராசியாளர்கள் இந்த விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!

0
3963

செவ்வாய் கிரகத்தை ராசிநாதனாக கொண்டிருக்கும் விருச்சிக ராசிக் காரர்களே, 2018ம் வருடம் உங்களுக்கு ஒரு கலவையான பலாபலன்களே கிடைக்கப் போகிறது. கெடுபலன்கள் சற்று அதிகமாகவே ஏற்படும் என்றாலும் அதை நீங்கள் எதிர்கொள்ளும் தைரியம்தான் இந்தாண்டு உங்களுக்கு வைக்கப்படும் டெஸ்ட்.

குடும்பம்:
குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை, சற்றே கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை இது. தாம்பத்திய உறவில் கவனம் செலுத்திட வேண்டும். வீட்டில் உள்ள தாய்-தந்தை மற்றும் பெரியவர்களிடம் மரியாதை நிமித்தமாக மட்டுமே நடந்துகொள்ள வேண்டும், அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்திட வேண்டும்.

 

2018 ராசிபலன்: விருச்சிக ராசியாளர்கள் இந்த விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!உத்தியோகம்:
உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் வரும் தடைகளையும், சவால்களையும் மனம் கலங்காமல் எதிர்கொள்ளுங்கள். தைரியமாக முன்னேறுங்கள்.

 

பொருளாதாரம்:
சனி பகவான் இரண்டாம் வீட்டிலும், கேது பகவான் மூன்றாம் வீட்டிலும், ராகு பகவான் ஒன்பதாம் வீட்டிலும் மற்றும் குரு பகவான் பன்னிரண்டாம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர். இதனால் பணம், காலம் உள்ளிட்ட விடயங்களில் பிரச்சினைகள் தலைதூக்கும். பணம் சார்ந்த விடயங்களில் ஜாக்கிரதையாக இல்லாத வரை இந்தாண்டின் துவக்கத்திலேயே உங்களுக்கு பணத் தட்டுப்பாடு ஏற்படும். வீண் விரயம் உண்டாகும்.

 

2018 ராசிபலன்: விருச்சிக ராசியாளர்கள் இந்த விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!ஆரோக்கியம்:
செவ்வாய் ஆனது வருடத்தின் பாதிக்கு மேல் ராகு – கேது கிரகங்களின் மத்தியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கோளாறுகள் ஏற்படலாம். எனவே உணவு முறை மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விடயங்களில் மிகவும் கவனமாக இருந்துகொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here