2018 புத்தாண்டு ராசிபலன்: தனுசு ராசி நேயர்களுக்கு இந்தாண்டு என்னென்ன நடக்கும்?

0
1532

குரு பகவானை ராசி நாதனாக கொண்டிருக்கும் தனுசு ராசி நேயர்களே, சில விஷயங்களை தவிர்த்து இந்த 2018ம் ஆண்டு சிறப்பானதாக அமையும்.

ரஜினியின் பிறந்தநாள் ஜாதகம்... பல கேள்விகளுக்கு பதில் உள்ளே!வளர்ச்சி:
சனி பகவான் ஜென்ம ராசியிலும், கேது பகவான் இரண்டாம் இடத்திலும், ராகு எட்டாம் இடத்திலும், குரு பகவான் பதினொன்றாம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர் என்பதால் இந்தாண்டு வளர்ச்சிக்குரிய ஆண்டாக உருவாகும்.

பொருளாதாரம்:
தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மேலும் மேலும் வளர்ச்சி அடைவதற்கு ஏதுவாக பல வாய்ப்புக்கள் உங்கள் வீட்டின் கதவை தட்டும். பணவரவு இருந்துகொண்டே இருக்கும். இரண்டுக்கும் மேற்பட்ட வழிகளில் ஆதாயமும், வருமானமும் குவியும்.

2018 புத்தாண்டு ராசிபலன்: மிதுன ராசிக்காரர்களே, 'உங்க காட்டுல அடை மழைதான்'!உழைப்பே உயர்வு:
வருமான உயர்வுக்கு இணையாக உங்களுடைய உழைக்கும் திறனுக்கும் சோதனைகள் ஏற்படலாம். கடுமையான உழைப்பை எதிர்கொள்ள நேரிடும். வாழ்க்கையில் எதுவும் மிதமிஞ்சி போகக்கூடாது. அளவுக்கு அதிகமாக உழைக்கிறேன் என வாழ்க்கையின் பல பொன்னான தருணங்களை அனுபவிக்க தவறி விடாதீர்கள்.

வாழ்க்கை:
உங்களது அணுகுமுறை மற்றும் பேச்சால் அலுவலகத்திலும், குடும்பத்திலும் சிறுசிறு சண்டைகள், சச்சரவுகள் ஏற்படலாம் என்பதால் நாவடக்கம் தேவை. பிரச்சினைகளைக் கண்டு ஒதுங்கிப் போனால் குடும்பத்தில் அமைதி நிலவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here