2018 புத்தாண்டு ராசிபலன்: ரிஷப ராசிக்காரர்களே கவனமாக இருந்தால் சிறப்பு!

0
11953

ரிஷபம் ஒரு பெண் ராசி ஆகும். எனவேதான் இந்த ராசிக்காரர்களான நீங்கள் பூமி ராசியின் குணம் கொண்டவர்களாக இருப்பீர்கள். இந்த ராசிக்கு சனி பகவான் கெடுதல்களை விளைவிக்க கூடிய கிரகமாக இருந்தாலும், ரிஷபத்திற்கு அவர் 9ம் மற்றும் 1௦ம் வீடுகளில் அமர்வதால் யோகங்களை அள்ளித்தரும் யோககாரகனாக கருதப்படுகிறார். இந்த 2௦18ம் ஆண்டில் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

2018 புத்தாண்டு ராசிபலன்: மேஷ ராசிக்காரர்களுக்கு ஒரு சர்பிரைஸ் காத்திருக்கிறது!

கஷ்டங்கள் தீரும்:
2௦17, செப்டம்பர் வரை 6ம் இடத்தில் இருந்த குருபகவான் உங்களுக்கு கஷ்டமான சூழ்நிலைகளை கொடுத்திருப்பார். அட்டம சனியும் படாத பாடுபடுத்திக்கொண்டிருக்கும். மன உளைச்சல்கள் ஏற்பட்டிருக்கும். நிம்மதியை இழந்து விரக்தி நிலையை தொடும் தூரத்தில் இருப்பீர்கள். கவலை வேண்டாம். இந்தாண்டு குரு, சனி, ராகு-கேது கிரகங்கள் பெயர்ச்சி அடையாமல் அதே இடத்தில நீடிப்பதால் இந்தாண்டு சிலப்பல கஷ்டங்கள் பொடிப்பொடியாகும்.

2018 புத்தாண்டு ராசிபலன்: ரிஷப ராசிக்காரர்களே கவனமாக இருந்தால் சிறப்பு!

தன்னம்பிக்கை தேவை:
இருப்பினும் நீங்கள் தன்னம்பிக்கையுடன் எதிர்நீச்சல் போட வேண்டிய வருடமாக அமையும் இந்த வருடம். சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் கொண்டவராக இருந்தாலும், சில நேரங்களில் சில மனிதர்களுடன் பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே நீங்கள் சற்று அமைதியாகவும் இருக்க வேண்டும்.

2018 புத்தாண்டு ராசிபலன்: ரிஷப ராசிக்காரர்களே கவனமாக இருந்தால் சிறப்பு!

வாகன யோகம்:
உங்கள் ராசிக்கு நான்காம் அதிபதியாக வரும் சூரியனால் சிலப்பல நன்மைகள் ஏற்படலாம். வீட்டு மனை, நிலங்கள் வாங்கலாம். வாகன யோகமும் உண்டு.

2018 புத்தாண்டு ராசிபலன்: ரிஷப ராசிக்காரர்களே கவனமாக இருந்தால் சிறப்பு!

உணவில் கவனம்:
குரு பகவான் ஆறாம் இடத்தில் அமர்ந்துள்ளதால் சிறு சிறு உடல் உபாதைகள் அவ்வப்போது ஏற்படும். எனவே உணவு சார்ந்த விடயங்களில் சற்று அதிகமாகவே கவனத்துடன் இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றிட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here