2018ல் இந்த மாதிரியெல்லாம் புத்தாண்டு சபதம் எடுத்துப் பாருங்களேன்!

0
326

தமிழ்நாடு அல்ல, இந்தியா அல்ல, உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான இளைஞர், இளைஞிகளின் இயர்-என்ட் பிளானிங் புத்தாண்டு சபதங்களில் இருந்து துவங்குகிறது. டிசம்பர் 25ம் தேதி விடுமுறை நாள்; அன்று திரும்பிப் பார்க்கும்போதுதான் இந்த முழு வருடத்தையும் சகட்டுமேனிக்கு வீணாக்கிவிட்டு, இறுதி ஐந்து நாட்களில் நின்று கொண்டிருப்பதை உணர முடிகிறது. இந்த உணர்தலில் இருந்து வீறு கொண்டு எழுவதுதான் நியூ இயர் ரிசல்யூஷன்ஸ்.

கண்ணகி சபதம் போட்டதை போல, ஒவ்வொருவரும் சபதம் எடுப்பார்கள். இன்னும் சில சிகாமணிகள் இயர்-பிளானிங் ஆப்பரேஷனை நடத்தி அதை படுக்கையறையில் ஒட்டிக் கொள்வார்கள். ஜனவரி இரண்டாம் தேதி வரைதான் ரிசல்யூஷன் நடக்கும். அடுத்த இரண்டு நாட்களில் அது வெறும் ரிஹர்சலாக முடிந்துவிடும். மிஞ்சிப் போனால் ஜனவரி பத்தாம் தேதியுடன் சபதம் காணாமல் போய்விடும்.

பெரும்பாலானோர் எப்படியெல்லாம் சபதம் எடுப்பார்கள் என்பதற்கான சில உதாரணங்களை இங்கே பார்ப்போம்.

 

இந்த வருஷம் எனக்கு ஃபிட்நஸ் இயர். ஜிம் போயி சிக்ஸ்-பேக்ஸ் வைப்பேன்.

 

இந்த சிகரெட் குடிக்குறத இந்த ஒன்னாம் தேதியில இருந்து நிறுத்திடுவேன். (31ம் தேதி இரவு பிடிக்கும் இறுதி சிகரெட்டை உதடுகளால் இறுக்கமாக பிடித்த படி)

 

இந்த வருசத்துல அம்மா – அப்பாக்கிட்ட திட்டும் வாங்கக் கூடாது. சண்டையும் போடக்கூடாது. அம்மா ப்ரேக் பாஸ்ட்க்கு உப்புமா போட்டாலும் சத்தம் போடாம முழுங்கிடனும்.

 

ஒன்னாம் தேதில இருந்து தண்ணியே அடிக்க மாட்டேன். ஆபீஸ் பார்ட்டில கூட லைம் ஜூஸ்தான் குடிப்பேன். இல்லைனா ரோஸ் மில்க் கூட குடிப்பேன்.

 

இனிமேல் ஃபேஸ்புக்ல அதிகமா நேரத்த வீணாக்க மாட்டேன். கண்டிப்பா இனிமே அடுத்தவன டேக் பண்ணி உயிரை வாங்க மாட்டேன். குறிப்பா சாட்டையடி தோழி, செருப்படி தோழி என பெண்கள் ஸ்டேட்டஸ்க்கு கமென்ட் போடுறத நிறுத்திக்குவேன்.

 

இந்த வருஷம் ஃபுல்லா காலேஜுக்கு லீவு போடாம போயிடுவேன். 99.09% அட்டனன்ஸ் வாங்கணும்.

 

இந்த வருஷம் எப்படியாவது லவ் ப்ரப்போஸ் பண்ணிடுவேன். நிறைய இடத்துல அப்ளிகேஷன் போட்டதையெல்லாம் கேன்சல் பண்ணிடனும்.

 

இந்த வருஷம் நொறுக்கு தீனிக்கு குட்பை சொல்லிடுவேன். இன்னும் 6 மாசத்துல தொப்பைய குறைச்சிட்டு ஸ்லிம் ஆக்கிக் காட்டுறேன் பாருங்க.

 

இந்த ஒன்னாம் தேதில இருந்து யாருக்கிட்டயும் கடன் வாங்கக் கூடாது. ‘நோ மணி… நோ ஹனி’ பாட்டை ரிங் டோனா வச்சிக்குவேன்.

 

இப்படியெல்லாம் சபதம் போட்டாலும் கடைசில வாழ்க்கை போற ரணகளத்துல எல்லாம் தலைகீழா மாறிடும். போதும் யா!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here