ஓரே நாளில் 100 கோடியா.. 2.0 வேற லெவல் கலெக்ஷன்..!

0
424

வியாழக்கிழமை வெளியான 2.0 படம் முதல் நாளில் இந்தியா முழுவதிலும் இருக்கும் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், இந்தியா முழுவதிலும் இந்தப் படம் வெற்றி அடைந்துள்ளது.

2.0 படத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ள நிலையில், இப்படத்தில் ஹிந்தியில் மிகப்பெரிய ஒப்பனிங் கிடைத்துள்ளது. இதன் காரணமாக இப்படத்தின் ஹிந்தி வெர்ஷன் மட்டும் சுமார் 20.25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

மேலும் இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் அதிகமான ஆர்வத்துடன் படத்தைப் பார்க்க திரையரங்கிற்கு வந்துள்ளனர்.

ஹிந்தியில் மட்டும் 25 கோடி ரூபாய் வசூலாகியுள்ள நிலையில், தமிழ், தெலுங்கு, வெளிநாடுகள் எனச் சுமார் 100 கோடி ரூபாய் வசூலை முதல் நாளிலேயே அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இப்படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here