ஃப்ளேஷ்பேக் 2௦17: தமிழக அரசியலில் ஏற்பட்ட 16 முக்கிய நகர்வுகள்!

0
7102

முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகான கடந்த ஒரு வருட காலத்தில் தமிழக அரசியல் ஏகப்பட்ட குழப்பங்களையும், விரும்பத்தகாத சில நிகழ்வுகளையும் கண்டிருக்கிறது. ஆளுங்கட்சியில் பிரிவினைகள், எதிர்க்கட்சிகளின் வார்த்தை ஜாலங்கள், மத்திய அரசின் அதிகாரப் பிரயோகம் என தமிழகம் கண்டுள்ள அரசியல் நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

ஃப்ளேஷ்பேக் 2௦17: தமிழக அரசியலில் ஏற்பட்ட 16 முக்கிய நகர்வுகள்!

#1 ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலா அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் பதவியை அடைய பல வழிகளில் முயன்று கொண்டிருந்தார். முதல்வராக்கிடவும் கூட அவரது ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வந்தனர்.

#2  முதல் முதலாக சேகர் ரெட்டியின் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். அதில் பல கோடிக்கணக்கான புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக சிக்கின.

ஃப்ளேஷ்பேக் 2௦17: தமிழக அரசியலில் ஏற்பட்ட 16 முக்கிய நகர்வுகள்!

#3 இரண்டாவதாக தமிழக தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவின் வீட்டிலும் ரெய்டு நடந்தது. தமிழக தலைமைச் செயலகத்தின், முதலமைச்சர் உள்ளே இருக்கும்போதே மோகனின் அலுவல் அறையில் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் ரொக்கமும், பல முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

#4 அ.தி.மு.க. இரண்டு அணிகளாக பிரிந்தது. ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஓரணியும், பழனிச்சாமி தலைமையில் ஓரணியுமாக பிரிந்தனர். பிறகு இரு அணியினரும் ஒன்றிணைந்து சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் கட்சியில் இருந்து விலக்கி வைப்பதாக அறிவித்தனர்.

ஃப்ளேஷ்பேக் 2௦17: தமிழக அரசியலில் ஏற்பட்ட 16 முக்கிய நகர்வுகள்!

#5 ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நேரத்தில், பணப்பட்டுவாடா நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணை வேந்தர் சீதாலட்சுமி, சரத்குமார் – ராதிகா ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. இதில் 89 கொடி ரூபாய் மற்றும் ஆவணங்கள் சிக்கின.

#6 அம்மாவை இழந்து வாடிய அ.தி.மு.க.வுக்கு ஆறுதல் சொல்லியதோடு மட்டுமில்லாமல் பா.ஜ.க.வுடன் நல்லதோர் இணக்கத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது சந்தர்ப்பவாதம்.

ஃப்ளேஷ்பேக் 2௦17: தமிழக அரசியலில் ஏற்பட்ட 16 முக்கிய நகர்வுகள்!

#7 டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்தை மீட்க டெல்லியில் முகாமிட்டு, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது சில நாட்களுக்கு பரபரப்பாக பேசப்பட்டது.

#8 மத்திய அரசையும், அதன் திட்டங்களையும் விமர்சிப்பவர்களை, குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளுவதும், போராளிகளுக்கு சமூக விரோதிகள் என பெயர் சூட்டுவதும் இந்த ஆண்டில் இருந்துதான் தமிழகத்தில் அமலுக்கு வந்தது. பியுஷ் மனுஷ், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைதாகினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here