பதட்டத்தில் சபரிமலை ! 144 தடை உத்தரவு!

0
286

சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு தந்து, அக்டோபர்-17 ஆம் தேதியிலிருந்து பெண்களும் செல்லலாம் என்று உத்தரவு பிறப்பித்தது சுப்ரீம் கோர்ட்.

இந்நிலையில் பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்புகள் வந்த நிலையில் அதனையும் மீறி பெண்கள் நேற்று சபரி மலை நோக்கி செல்ல ஆர்ம்பித்தனர். அவர்களை தடுக்கும் வகையில் நிலக்கல் அருகே பல்வேறு போரட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர்.

இன்னும் பலர் பெண்கள் மீது தாக்குதல்கள் நடத்தினர். கேமராக்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் பெண்களின் காலில் விழுந்து போக வேண்டாம் என்று சாத்வீகமான முறையில் தடுத்தனர்.

இப்பட்டி இருக்க இன்னும் சபரி மலை சுற்றிலும் இருக்கும் பல இடங்களில் பிரச்சனைகளும் கலவரங்களும் நடந்த வ்ண்ணம் உள்ளன. பெண்களி போக வேண்டாம் என்று போராட்டம் செய்தவர்களின் மீது போலிசார் தடியடி நடத்தினர். இதனால் பெரும் பிரச்சனைகள் சபரி மலை சுற்று வ்ட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.

ஆகவே அம்மாவட்ட ஆட்சியர் நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதான இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டார். எனவே கலவரத்தை அடக்க அக்டோபர் 22ம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பினராயி விஜயன் இந்த கலவரத்தினல தான் எடுத்த முடிவில் இருந்து பின் வாங்கவில்லை. என்ன நடந்தாலும் பெண்களை கோவிலுக்குள் அனுமத்தித்தே தீருவேன் என்று உறுதியோடு இருக்கிறார். இதனால் பெண்களின் உரிமைக்காக அவரே பிரச்சாரமும் செய்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here