ஸ்மார்ட்போனில் இதைச் செய்தால், கோவிந்தா தோவிந்தா தான்.. உஷார இருங்க..!

0
3702

இன்றைய வாழ்க்கை முறையில் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றுக்குப் பின் ஸ்மார்ட்போன் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்தத் தலைமுறை மக்களுக்கு ஸ்மார்ட்போன் ஒரு வியாதியாகவே மாறியுள்ளது என்றால் மிகையாகாது.

இத்தகைய முக்கியமான கருவியாகத் திகழும் ஸ்மார்ட்போன் மூலம் பல அசம்பாவிதங்களும் நடைபெற்று வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு மலேசியாவில் ஒரு நிறுவன தலைவர் ஸ்மார்ட்போன் வெடித்து இறந்து போனார், உலகின் பல இடங்களில் ஸ்மார்ட்போன் வெடித்து மக்கள் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்மார்ட்போன் எப்படி எல்லாம் பயன்படுத்தக் கூடாது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

கூடாது..

பலர் தங்களது மொபைலை இரவு முழுவதும் சார்ஜ் செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர், இல்லையேல் நீண்ட நேரம் சார்ஜ் செய்யவும் செய்கிறார்கள்.

ஸ்மார்ட்போன் சார்ஜ் 100% முழுமை அடைந்த உடன் அதைச் சார்ஜில் இருந்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் போனை பயன்படுத்தும் போதும் அதிகச் சூடாகும் பிரச்சனைகள் ஏற்படும்.

பாக்கெட்

எப்போதும் ஸ்மார்ட்போனை சட்டை பாக்கெட்டில் வைக்கக் கூடாது. ஸ்மார்ட்போனில் வெளியாகும் கதிர்கள் இதயத்தை அதிகளவில் பாதிக்கக் கூடியது.

இசை

ஸ்மார்ட்போன் சார்ஜில் இருக்கும் போது இயர்போன், ஹெட்போன் மூலம் பாட்டு, வீடியோவை பார்க்க கூடாது. ஸ்மார்ட்போன் மூலம் ஏற்பட்ட மரணங்களில் பல ஸ்மார்ட்போன் சார்ஜில் இருக்கும் போது இயர்போன் பயன்படுத்தியதன் வாயிலாகவே நிகழ்ந்துள்ளது.

தூக்கம்

நீங்கள் தூங்கும் போது நிச்சயம் உங்கள் அருகில் மொபைல் போன் இருக்கக் கூடாது. ஸ்மார்ட்போனில் வெளியாகும் கதிர்கள் மூளையை அதிகளவில் பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.

சூரியன்

சூரிய கதிர்களுக்கு நேரடியாக வைத்து ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யக் கூடாது, குறிப்பாகக் கார் டேஷ்போர்க்கு மேல் வைத்துச் சார்ஜ் செய்யக் கூடாது.

இதற்கு முக்கியக் காரணம், ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும் சாதாரணமாகப் போனின் வெப்ப நிலை அதிகரிக்கும், சூரிய ஒளி படும் வகையில் 0-45 செல்ஷியஸ் வரையில் உயரும்.

தரைமட்டம்

சார்ஜ் செய்யும் போது ஸ்மார்ட்போன் நிலையான தரைமட்டத்தில் இருக்க வேண்டும், குறிப்பாகத் தலையணை மீது வைத்துச் சார்ஜ் செய்யக் கூடாது. நிலையற்ற தரைதளம் அல்லது தலையணை மீது வைத்துச் சார்ஜ் செய்யும் போது ஸ்மார்ட்போன் தீ பிடிக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

அதிக அழுத்தம்

ஸ்மார்ட்போன் மீது அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது. குறிப்பாக டைட்டான பேன்டில் வைக்கக் கூடாது. ஸ்மார்ட்போன் மீது அதிக எடை கொண்ட பொருட்களை வைக்கக் கூடாது.

மல்டிபின்

முடிந்த வரையில் மல்டிபின் சார்ஜரில் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய வேண்டாம். சில சமயம் அதிக வோல்டேஜ் மூலம் போனில் பாதிப்பு உண்டாகும்.

சரியான இடம்

ஸ்மார்ட்போனில் அதிகளவிலான தரவுகள் உள்ளது ஒரு பக்கம் இருக்கிறது. மறுபுறம் ஸ்மார்ட்போன் அதிநவீன எலக்ட்ரானிக்ஸ் கருவி என்பதால் அதனைச் சரியான முறையில் பழுது நீக்க வேண்டும் இல்லையெனில் ஸ்மார்ட்போனையே இழக்க நேரிடும்.

ஆகவே ஸ்மார்ட்போன் மற்றும் அதில் உள்ள தரவுகளைக் காப்பாற்ற சரியான அனுமதி பெற்ற கடைகளில் கொடுத்து பழுது நீக்க வேண்டும்.

மட்டமான சார்ஜர்

ஸ்மார்ட்போனை லோக்கல் சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்ய வேண்டாம். அப்படிச் செய்தால் உங்கள் போனையே நீங்கள் இழக்க நேரிடும்.

சார்ஜில் உள்ள போன்

உங்கள் போன் சார்ஜ் செய்யப்படும் போது போன் பேசவோ அல்லது கேம் விளையாடவோ நிச்சயம் கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here