திருமணம் செய்வதற்கு முன் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை..!

0
3891

திருமணம் என்பது ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் வேண்டிய மிக முக்கியமான சுபநிகழ்வு. தனது துணையாக வரும் பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு நல்ல நாள் பார்த்து தேதி வைத்து பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஆசியோடு மணம் முடிப்பார்கள்.

மகிழ்ச்சியாக தொடங்க வேண்டிய மணமக்களின் வாழ்வு எந்த ஒரு கெடுதலும் இன்றி மகிழ்ச்சியாக தொடங்க தான் குறிப்பிட்ட தினத்தில் திருமண ஏற்படுகள் செய்யப்படுகின்றன. திருமண தேதியை குறிக்கும் முன் இவற்றை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

திருமணம் செய்வதற்கு முன் இதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்..!

முதல் விதி:
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது. அந்த மாதம் திருமணத்திற்கு ஏற்றதாக இருக்காது. பின் சங்கடங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இரண்டாவது விதி:
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதை மிகவும் நல்லது  மற்ற மாதங்களில் திருமணம் செய்வதை தவிர்ப்பது மணமக்களுக்கு  நல்லது.

மூன்றாவது விதி:
திருமணம் செய்து கொள்ளும் மணமக்கள் நெடுநாளுக்கு மகிழ்ச்சியாக இருக்க இயன்றவரை வளர் பிறை காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி. தேய் பிறை காலத்தில் திருமணம் பெரும்பாலும் செய்ய வேண்டாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here