காதல் திருமணம் செய்ய மாட்டோம்.. உறுதிமொழி எடுக்கும் 10,000 இளைஞர்கள்..!

0
146

முதல் சந்திப்பிலேயே காதல் வயப்படுவது என்பது எளிதான காரியம் ஆனால் காதல் திருமணம் என்பது இன்றளவும் போராட்டமாகத் தான் இருக்கிறது. இந்நிலையில் ஓவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தின்று ஒரு கூட்டம் விநோதமாக நடந்துகொள்ளும்.

அந்த வகையில் இந்த வருடம் காதல் தினத்தில் சூரத்தில் சுமார் 10,000 இளைஞர்கள் காதலிக்க மாட்டோம், அப்படி யாரையேனும் காதலித்தால் பெற்றோரின் அனுமதி இல்லாமல் திருமணம் செய்ய மாட்டோம் என உறுதிமொழி எடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

Hasyamev Jayate என்கிற தன்னார்வ அமைப்புச் சூரத்தில் இருக்கும் 12 பள்ளிகளை ஒன்றுகூட்டி சுமார் 10000க்கும் மேற்பட்ட மாணவர்களை இந்த விநோதமான உறுதிமொழி எடுக்க உள்ளனர். இந்த அமைப்பை லாப்டர் தெரபி நிபுணர் காமலேஷ் மாசலாவாலா நடத்து வருகிறார்.

இதுகுறித்து மாசலாவாலா கூறுகையில், “இன்றைய காலகட்டத்தில் அதிகமான இளைஞர்கள் காதலில் விழுகின்றனர், அதுமட்டும் அல்லாமல் திருமணம் குறித்து மிகவும் இளைய வயதிலேயே முக்கிய முடிவுகளை எடுக்கின்றனர். இதனைத் தடுத்து பெற்றோர் வழியில் நடக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here