நிவின் பாலியை போல தாடி,மீசை வேண்டுமா? 10 டிப்ஸ்!

0
6966

தாடி, மீசை வளர்ப்பதுதான் கெத்து, வீரம், கம்பீரம், கலாசாரம் என சொல்லிக்கொண்டிருந்தவர்களின் மாடுலேஷனை அப்படியே டிரென்டாக மாற்றி தாடி-மீசை வைத்தால் ஸ்டைல், ஃபேஷன் என விதியெழுதி விட்டார்கள் டிரென்ட் செட்டர்கள். இந்த டிரென்ட் இந்தியாவில் லேண்ட் ஆன வேகத்தில், இந்திய இளைஞர்கள் அந்த வேகத்திற்கு ஈடு கொடுத்து தாடி மீசையை வளர்க்க அரும்பாடு பட்டு வருகிறீர்கள். உங்களுக்காக தொகுக்கப்பட்டவைதான் இந்த வழிமுறைகள்.

 

#1 முகத்தையும், கழுத்தையும் அடிக்கடி நீரில் கழுவ வேண்டும். இது சருமத்தில் படிந்துள்ள இறந்த செல்களை வெளியேற்றி முடி வளர உதவும்.

#2 ஒரு நாளுக்கு 2 முறைகள் சருமத்தை வெந்நீரில் கழுவ வேண்டும்.

#3 தூங்கச் செல்லும் முன்பாக நெய், தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கை மாய்ஸுரைசர்களை பயன்படுத்தி மசாஜ் செய்ய வேண்டும்.

#4 நாளொன்றுக்கு 6 மணி நேரம் நல்ல உறக்கத்தைப் பெற வேண்டும். நல்ல உறக்கத்தால் தாடி, மீசை உள்ளிட்ட முடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.

#5 விட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, கொய்யா போன்ற பழங்களையும், காய்கறிகளையும் தினமும் உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

#6 முடி வளர்ச்சியை தூண்டும் புரோட்டின் நிறைந்த பால் மற்றும் பால் பொருட்களை அவசியம் சாப்பிட்டு வரவேண்டும்.

#7 தாடி-மீசை வளர்ச்சிக்கென சந்தையில் விற்கப்படும் ஆர்கனிக் எண்ணெய் வகைகளை தீர விசாரித்து, குறிப்பாக ஆன்லைனில் அதன் யூசர் ரிவ்யூவை படித்துவிட்டு வாங்கி பயன்படுத்துவது நன்று.

#8 நாட்டுக்கோழி இறைச்சி, மீன், முட்டை ஆகிய உணவுகளை வாரத்திற்கு 2 முறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

#9 மினரல் நிறைந்த வாழைப்பழம், வெள்ளரி, இளநீர் ஆகியவற்றை தினமும் சாப்பிட வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள துளைகள் காற்றுப்போக்குடன் இருக்கும். தாடி மீசை வளரவும் வழிவகுக்கும்.

#10 மேலே சொல்லப்பட்டுள்ள உணவுகள் எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டு அப்படியே இருந்துவிட்டால் மட்டும் முடி வளர்ச்சி கிடைக்காது. இத்துடன் நீங்கள் உடற்பயிற்சி, நடைப்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

உடலியக்கச் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தாலேயொழிய சருமத்தில் புத்துணர்ச்சி பிறந்து, முடி வளர்ச்சிக்கும் வித்திடும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here