இந்திய நெடுஞ்சாலைகள் பற்றி நீங்கள் அறிந்திடாத உண்மைகள், ஆச்சரியங்கள்!

0
1181

ந்திய நெடுஞ்சாலைகள் மொத்த தேசிய கூட்டமைப்பில் இரண்டு சதவீதம் ஆகும், ஆனால் அவை நாற்பது சதவீத போக்குவரத்தை கையாளுகின்றன. மாநில நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் கூட்டிணைவில் மொத்தம் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 899 கி.மீ. தொலைவுக்கு அமைந்திருக்கும் இந்த சாலைகளைப் பற்றி நீங்கள் அறியாத, ஆச்சரியம் தரும் தகவல்களை தொகுத்து வழங்கியுள்ளோம்.

1. நாற்பது லட்சம் கிலோ மீட்டர் நீளமான சாலைகளுடன், உலகிலேயே இந்தியா தான் இரண்டாவது பெரிய சாலைப் பிணையத்தை பெற்றுள்ள நாடாகும்.

2. அதிவேக நெடுஞ்சாலைகள் உள்பட நாட்டின் நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 93,051 கிலோ மீட்டர் ஆகும். நாட்டின் நாற்பது சதவீத போக்குவரத்து இந்த சாலைகளில்தான் நடக்கிறது.

 

 

3. நாட்டின் மிக நீண்ட நெடுஞ்சாலை NH44; ஸ்ரீநகரையும் கன்னியாகுமரியையும் இணைக்கிறது. ஜம்முகாஷ்மீர், அரியானா, பஞ்சாப், டெல்லி, உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா தமிழகம் ஆகிய மாநிலங்களை இணைக்கிறது.

4. மிகச்சிறிய நெடுஞ்சாலை NH47A எர்னாகுளத்திலிருந்து கொச்சி துறைமுகத்தை இணைக்கிறது. இதன் நீளம் வெறும் 6 கிலோ மீட்டர்தான்.

5. தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டமானது டெல்லி-மும்பை-சென்னை-கொல்கத்தா என நான்கு மெட்ரோ நகரங்களை இணைக்கிறது.

6. ஆசிய நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் என மூவகை நெடுஞ்சாலைகள் இந்தியாவில் உள்ளன. ஆசிய நெடுஞ்சாலைகள் இந்தியாவையும் ஆசிய நாடுகளையும் இணைக்கின்றன. ஆசிய நெடுஞ்சாலைகளின் பிணையம் என்று தனியாக இல்லை. கூட்டுறவு திட்டத்தின் கீழ் ஆசிய நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையே AH1 சாலை இணைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சீனாவின் கன்சூ மாகாணத்தில் உள்ள லான்ஸௌ நகரையும், இந்தியாவின் ஜார்கண்ட் பகுதியையும் AH42 என்ற நெடுஞ்சாலை இணைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here