இந்தியாவையே உலுக்கிய 10 மிகப்பெரிய ஊழல்கள்!

0
810

2ஜி அலைக்கற்றை ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், போஃபர்ஸ் ஊழல், ஹவாலா ஊழல், மாட்டுத் தீவன ஊழல் ஆகிய மோசடிகளில் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் பல ஆயிரம் கோடிகளை ஏப்பம் விட்டிருக்கின்றனர். இப்போது இந்தியாவை உலுக்கிய 10 மிகப்பெரிய ஊழல்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

1.ஹெலிகாப்டர் பேர ஊழல்:

ஹெலிகாப்டர் பேர ஊழல் சமீபத்தில் இந்தியாவை கலக்கிக் கொண்டிருக்கும் ஊழல்களில் இதுவும் ஒன்று. இந்திய ராணுவத்துக்குக் கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்துள்ள இந்த ஊழலில் ரூ.74.5 கோடி வரை இத்தாலிய கம்பெனியுடன் பேரம் நடந்துள்ளது.

2.நிலக்கரி ஊழல்:

நிலக்கரி ஊழல் சுமார் 155 ஏக்கர் அளவிலான நிலக்கரி சுரங்கங்களை முறையாக ஏலம் விடாமல் தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்ததன் மூலம் இந்திய அரசு சுமார் ரூ.185,591 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது.

3.தாத்ரா ஊழல்:

தாத்ரா வெக்ட்ரா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் இணைந்து 7000க்கும் அதிகமான ட்ரக்குகளை இந்திய ராணுவத்திற்கு வாங்கியதில் ரூ.750 கோடிக்கு பேரம் நடந்துள்ளது.

4.ஆண்ட்ரிக்ஸ் தேவாஸ் பேர ஊழல்:


இரண்டு செயற்கக்கோள்களில் S-band ட்ரான்ஸ்பாண்டர்களைப் பொருத்துவதற்கான ஒப்பந்தங்கள் தொடர்பான விஷயங்களை மத்திய அரசிடம் இஸ்ரோ மறைத்து விட்டதால், இதனால் அரசுக்கு ரூ.200,000 கோடி இழப்பு ஏற்பட்டது

5.2ஜி அலைக்கற்றை ஊழல்:


2ஜி அலைக்கற்றை உரிமத்தை சட்டவிரோதமாகத் தனியார் நிறுவனங்களுக்கு மிகமிகக் குறைந்த விலையில் தாரை வார்த்ததில் ரூ.176,000 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழலில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராசா, திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்பட பலர் சிபிஐ வசம் சிக்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here